Homeசெய்திகள்க்ரைம்பெங்களூரு :  ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை – காவல்துறையினர் தீவிர விசாரணை

பெங்களூரு :  ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை – காவல்துறையினர் தீவிர விசாரணை

-

- Advertisement -

பெங்களூரு :  ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை – காவல்துறையினர்  தீவிர விசாரணை

ஏடிஎம் இயந்திரத்தை அடியோடு எடுத்துச் சென்று அதில் இருந்த பணத்தை எடுக்க முடியாத நிலையில் பெட்டியை சாலை ஓரத்தில் வீசி சென்ற மர்ம நபர்கள்.

பெங்களூரு :  ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை – காவல்துறையினர்  தீவிர விசாரணை

பெங்களூரு நகரில் அத்திப்பள்ளி அருகே  மஞ்சனஹள்ளி பகுதியில் உள்ள  கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் உள்ளது. இங்கு நள்ளிரவில் சரக்கு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஏடிஎம் யந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணப்பெட்டியை சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்று அருகில் இருந்த தோப்பில்  அக்ஸா பிளேட்  பயன்படுத்தி  பணப்பெட்டியை திறந்து பணத்தை எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்

அதற்குள் பொழுது விடியவே எங்கே மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து பணப்பெட்டியை அங்கே வீசிவிட்டு  சென்றுள்ளார். இதையடுத்து  காலை அந்த வழியாக சென்றவர்கள்  பார்த்துவிட்டு  அத்திப்பள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  காவல்துறையினர் பணப்பெட்டியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.பெங்களூரு :  ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை – காவல்துறையினர்  தீவிர விசாரணை

விசாரணையில் அந்த ஏடிஎம் பணப்பெட்டியில் 10 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.  ஏடிஎம்  மையத்திலிருந்து பணப்பெட்டியை திருடி சென்று  தோப்பில் வீசி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பில் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளை எடுத்து குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையில் லாரி ஓட்டுநரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

MUST READ