Homeசெய்திகள்க்ரைம்சென்னை செங்குன்றத்தில் நிலமோசடி வழக்கில் பாஜக பிரமுகர் 2 நபர் கைது

சென்னை செங்குன்றத்தில் நிலமோசடி வழக்கில் பாஜக பிரமுகர் 2 நபர் கைது

-

சென்னை செங்குன்றத்தில் நிலமோசடி வழக்கில் பாஜக பிரமுகர் 2 நபர் கைது
பாஜக பிரமுகர்

சென்னை செங்குன்றம் அருகே நிலமோசடி வழக்கில் பாஜகவை சேர்ந்த மூன்று பேரை ஆவடி காவல் ஆணைய சிசிபி போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சௌகார் பேட்டையைச் சேர்ந்த சுல்தான் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆவடி காவல் ஆணையகத்தில் உள்ள நிலமோசடி பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அதில் செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் தனக்கு சொந்தமான 23.5 சென்ட் நிலத்தை அதேபகுதியை சேர்ந்த கே.ஆர். வெங்கடேசன், பிரிதிப்குமார் அவருடைய மகன் நரேஷ்குமார் ஆகிய மூன்று பேரும் போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை மோசடி செய்ததாக புகாரில் தெரிவித்திருந்தார்.

அந்த நிலத்தின் மதிப்பு சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் பாடியநல்லூரை சேர்ந்த கே.ஆர்.வெங்கடேசன், (பாஜக) பிரிதிப்குமார் அவருடைய மகன்  நரேஷ்குமார் (பாஜக) திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடியநல்லூரை சேர்ந்த கே.ஆர்.வெங்கடேசன் மீது ஆந்திரா போலீசார் செம்மரக்கடத்தல் வழக்கில் 2015ல் கைது செய்தனர். மேலும் செங்குன்றம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2011ல் வெங்கடேசன் குண்டாஸ் வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.

அதிமுகவில் மாவட்ட இளைஞர் அணியில் இருந்த வெங்கடேசன் செம்மரம் கடத்தல் புகாரால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.  கடந்த 2022ல் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணைந்தார். அப்போது அவருக்கு மாவட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டது. அதனால் சர்ச்சை எழுந்ததால் பதவியில் இருந்து மட்டும் நீக்கப்பட்டார். தற்போது பாஜக வில் இருந்து வருகிறார்.

சென்னை செங்குன்றத்தில் நிலமோசடி வழக்கில் பாஜக பிரமுகர் 2 நபர் கைது
நரேஷ் குமார் கைது

நிலமோசடியில் சிக்கிய மற்றொரு குற்றவாளி நரேஷ்குமார் பாஜக வில் திருவள்ளூர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.  கே.ஆர்.வெங்கடேசன், பிரிதிப்குமார் மற்றும் அவருடைய மகன் நரேஷ்குமார் ஆகிய மூன்று பேரையும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ