spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பட்டாபிராம்-ல் பால் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

பட்டாபிராம்-ல் பால் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

-

- Advertisement -

பட்டாபிராம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பால் வேனில் வந்து அடுத்தடுத்து பால் டப்பா வுடன் திருட்டு- பால் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

பட்டாபிராம்-ல் பால் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்புசென்னை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் மலர்விழி/58. இவர் பட்டாபிராமில் சுமார் 10 வருடத்திற்கும் மேலாக ஆவின் பால் நிலையம் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.இவர் கடைக்கு தினந்தோறும் விற்பனைக்கு தேவையான பால்களை மொத்தமாக அதிகாலை வேலையில் கடை முன்பு பல்வேறு பால் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வைத்துவிட்டு செல்வது வழக்கம்.பின்னர் காலை வேலையில் கடைக்கு வந்து விற்பனை செய்து வருகிறார்.

we-r-hiring

இந்த நிலையில் அதிகாலை வியாபாரத்திற்கு அடுக்கி வைத்து இருந்த பால் பாக்கெட்டுகள் டிரே குறைவாக இருந்ததால் சம்பந்தபட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளார்.இதனை தொடர்ந்து அருகில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிகாலை வேலையில் AC பால் வேனில் வரும் மர்மநபர் ஒருவர் 50 பால் பாக்கெட்டுகளை திருடி செல்வது பதிவாகி உள்ளது.

இதே போன்று பட்டாபிராம் பாபு நகர் பகுதியில் பால் வியாபாரம் செய்து வரும் ஶ்ரீகுமார் என்பவரின் கடையில் இருந்து அதே AC பால் வேனில் வரும் மர்மநபர் 144  பால் பாக்கெட்களை திருடி சென்றுள்ளார்.

பட்டாபிராம்-ல் பால் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

இது மட்டுமின்றி திருநின்றவூர் சரவணன் என்பவருக்கு சொந்தமான பால் நிலையத்தில் 120 பால் பாக்கெட்டுகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்,இது போன்று ஆவடி, வேப்பம்பட்டு உள்ளிட்ட இடங்களில் இதே கும்பல் பொதுமக்களுக்கு சந்தேகம் வராத வகையில் பால் வேனிலேயே வந்து பால் பாக்கெட்டுகளை டிரே உடன் திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பட்டாபிராம் காவல் நிலையத்தில் சம்பந்தபட்ட நபர்கள் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் நூதன பால் திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

MUST READ