spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

சென்னையில் விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

-

- Advertisement -

சென்னையில் விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

சென்னை அடுத்த கேகே நகர் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே விசிக பிரமுகர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்டகட்டி ரமேஷ்

சென்னை கே.கே.நகர் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே விசிக பிரமுகர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ரமேஷ் என்ற குட்டி என்பவரின் உடலை கைப்பற்றிய எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ கேட்டகிரி ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ள ரமேஷ் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல், அடிதடி உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ரியல் எஸ்டேட் தொடர்பான கட்டப்பஞ்சாயத்து முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாக போலீசார் விசாரணை தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

கேகே நகர் பாரதிதாசன் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே பெட்டிக்கடையில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ரமஷை, முகமூடி அணிந்துவந்த கும்பல், பெட்டிக்கடை வாசலில் வைத்து ஓட ஓட விரட்டி வெட்டியது. அதன் பின் அந்த கும்பல் காரில் தப்பிச் சென்றது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த டீக்கடைக்காரர், காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

 

MUST READ