spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்- வீடு புகுந்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு

பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்- வீடு புகுந்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு

-

- Advertisement -

பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்- வீடு புகுந்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு

நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், வீடு புகுந்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெருந்தருவில் வீட்டிற்குள் புகுந்து பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் சின்னதுரை (17) என்பவரை மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. அதனை தடுக்க வந்த அவரது சகோதரி சந்திர செல்வி என்பவரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது . இருவரும் ஆபத்தான நிலையில் நாங்குநேரி மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

we-r-hiring

police

வள்ளியூர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடையே பள்ளியில் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக மூன்று மாணவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பேரன் சின்னத்துரை வெட்டபட்ட அதிர்ச்சியில் அவரது தாத்தா கிருஷ்ணன் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் தப்பி ஓடிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

MUST READ