spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்விதிகளை மீறிய ஜோடி போலீசார் அபராதம்

விதிகளை மீறிய ஜோடி போலீசார் அபராதம்

-

- Advertisement -

விதிகளை மீறிய ஜோசடி போலீசார் அபராதம்

காதலி பைக் ஓட்ட காதலன் முன்னே அமர்ந்து காதல் ரீல்ஸ் செய்து வெளியிட்ட ஜோடிக்கு போக்குவரத்து போலீசார் 13,000 அபராதம் விதித்து உள்ளனர்.

விதிகளை மீறிய ஜோசடி போலீசார் அபராதம்

we-r-hiring

திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த பழங்கரை பெரியாயிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமர். இவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது காதலியுடன் பல்வேறு ரீல்ஸ் வீடியோக்களை செய்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். இவர் தனது காதலியிடம் இருசக்கர வாகனத்தை கொடுத்து அவரை வாகனத்தை இயக்கச் செய்து பெட்ரோல் டேங்கில் ஏறி அமர்ந்தபடி கன்னத்தைக் கிள்ளி காதல் செய்து ரிலீஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி அருகே ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து – 20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்

இதனைக் கண்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கு இந்த வீடியோக்களை அனுப்பி புகார் செய்து வந்தனர்.

இதனை தொடர்ந்து அவினாசி போக்குவரத்து போலீசார் பைக்கின் உரிமையாளரான ராமர், வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாத பிரீத்தி என்பவரை வாகனம் இயக்க வைத்ததும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது போக்குவரத்து விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளனர்.

விதிகளை மீறிய ஜோசடி போலீசார் அபராதம்

போலீசார் இதனை எக்ஸ் தளத்தில் பதிவு செய்து புகார் செய்தவர்களுக்கு பதில் அனுப்பி உள்ளனர்.

MUST READ