சிறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் 15 நாட்களுக்கு பிறகு ஒரு நாள் கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரணை
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் இரண்டாவது குற்றவாளியான தருமபுரம் ஆதீனகர்த்தரின் முன்னாள் நேர்முக உதவியாளர் திருவையாறு செந்தில் வாரணாசியில் கைது செய்யப்பட்டு மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு 15 நாட்களுக்கு பிறகு மயிலாடுதுறை போலீசார் ஒரு நாள் செந்திலை காவலில் எடுத்து விசாரிக்க மயிலாடுதுறை நீதிமன்றத்தில் மனு அளித்தது.
மனு அளித்த நிலையில் மனுவை விசாரித்த நீதிபதி ஒருநாள் விசாரணைக்கு அனுமதி அளித்ததை அடுத்து போலீசார் செந்திலை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கோள்ளபடுகின்றன என்பது குறிப்பிடதக்கது.