spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்தேமுதிக பிரமுகர் மர்ணமான முறையில் கொலை! காவல்துறையினர் தீவிர விசாரணை

தேமுதிக பிரமுகர் மர்ணமான முறையில் கொலை! காவல்துறையினர் தீவிர விசாரணை

-

- Advertisement -

விடுதி அறைக்குள் தேமுதிக பிரமுகர் ஏழுமலை அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளாா். அவரது சடலத்தை காவல்துறையினா் மீட்டனா்.தேமுதிக பிரமுகர் மா்ணமான முறையில் கொலை! காவல்துறையினா் தீவிர விசாரணைதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அமைந்துள்ள சன்னதி தெருவில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதே பகுதியை சேர்ந்த தேமுதிக பிரமுகர் ஏழுமலை (50) என்பவர் ஒரு தனியார் தங்கும் விடுதியில், கடந்த சில நாட்களாக வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று மாலை விடுதி அறையில் தேமுதிக பிரமுகர் ஏழுமலை அழுகிய நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்ததும் திருவேற்காடு போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனா். அங்கு விடுதி அறைக்குள் அழுகிய நிலையில் கிடந்த தேமுதிக பிரமுகர் ஏழுமலையின் சடலத்தை கைப்பற்றினாா்கள்.

மேலும், அச்சடலத்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தாா்கள். இவரது மரணம் மா்மாக உள்ளதால், காவல் துறையினா் வழக்கு பதிவு செய்து விசாாித்து வருகின்றனா். முதல் கட்ட விசாரணையில், இறந்துபோன தேமுதிக பிரமுகர் ஏழுமலை தையல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளதாக தொியவந்துள்ளது. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது. கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனா். இந்த நிலையில் தேமுதிக பிரமுகர் ஏழுமலை திருவேற்காட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்ததாக காவல் துறையினருக்கு தெரியவந்ததுள்ளது.

we-r-hiring

இதுகுறித்து திருவேற்காடு போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து பாா்த்தாா்கள். அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளாரா அல்லது அவரை மர்ம நபர்கள் யாரேனும் முன்விரோத தகராறு காரணமாக அடித்து கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெயர் கேட்டாலே நடுங்கும்  ஆண்கள்… யார் அந்த  சொப்பன சுந்தரி ஹேமலதா?…

 

MUST READ