spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்திருநின்றவூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்!

திருநின்றவூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்!

-

- Advertisement -

திருநின்றவூரில் வனதுறையால் கடத்தல் காரர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல்.

திருநின்றவூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்!காரில் கடத்தல் காரர்களை பின் தொடர்ந்து வந்து யானை தந்தத்தை பறிமுதல் செய்யும் காட்சியும் கடத்தல் காரர்கள் காரிலிருந்து தப்பி ஓடும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி.

we-r-hiring

திருவள்ளூர் பகுதியில் இருந்து சிகப்பு நிற டொயோட்டா கிலான்சா சொகுசு காரில் சிலர் யானை தந்தத்தை கடத்தி செல்வதாக சென்னை வனவிலங்குகள் குற்றகட்டுப்பாட்டு பிரிவு மற்றும் திருவள்ளுர் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த  தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் அவ்வழியாக அந்த வாகனத்தை வனத்துறை மறித்துள்ளனர். ஆனால் கார் நிற்காமல் திருநின்றவூர் நோக்கி அதி வேகமாக சென்றுள்ளது, இதனை பின்தொடர்ந்து வனதுறை அதிகாரிகள் வந்துள்ளனர். திருநின்றவூர் அருகே வனத்துறை தங்களை பின் தொடர்ந்து வருவது தெரிந்தது கொண்ட கடத்தல் காரர்கள் காரை வேகமாக இயக்கி வந்துள்ளனர்.

திருநின்றவூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்!அப்பொழுது சாலையில் சென்ற சிலரை கடத்தல் காரர்கள் இடித்து தள்ளி உள்ளனர். முதியவர் ஒருவர் லேசான காயம் அடைந்துள்ளனர். கடத்தல் காரர்களின் கார் திருநின்றவூர் கோமதிபுரம் அரசு பள்ளி அருகே வந்த போது குறுகலான சாலையில் காரை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனை பின் தொடர்ந்து வந்த வனவிலங்கு குற்ற கட்டுப்பாடு அதிகாரிகள் காரை பறிமுதல் செய்து அதிலிருந்த தந்ததை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் தப்பி ஓடிய கடத்தல் காரர்களில் ஒருவனை கைது செய்த போலீசார் அவனிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்டது காஞ்சிபுரம் ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த உதயகுமார் என்பதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட உதயகுமார் திருவள்ளுர் வனத்துறை அலுவலகத்திற்கு கூட்டி சென்று யானை தந்தம் எங்கிருந்து வந்தது, கடத்தல் யார் யாருக்கு தொடர்பு ,யாருக்கு விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்டது, தப்பி ஓடியவர்கள் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட தந்ததின் மதிப்பு ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பரபரப்பாக காணப்படும் பிரதான சாலையில் வனத்துறை அதிகாரிகள் காரை பின் தொடர்வதும் காரை நிறுத்திவிட்டு கடத்தல் காரர்கள் தப்பி ஓடுவதும் வனத்துறையினர் யானை தந்தத்தை எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநின்றவூர் அருகே சுமார் ஒரு கோடி மதிப்பிலான 3 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ