இந்திய சிகரெட்டுகள் போல், போலியான சிகரெட்களை தயாரித்து, துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து, சரக்கு கப்பல்களில், சென்னை துறைமுகத்துக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்புடைய, ஒரு கோடி போலி சிகரெட்களை, மத்திய வருவாய் புலனாய் துறையினர் பறிமுதல் செய்து, மேலும் விசாரணை.
போலி சிகரெட்களை, கடத்தி வந்த கடத்தல் கும்பல் தலைமறைவாகி விட்டதால், கடத்தல்காரர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை.
இந்த போலி சிகரெட்களை புகைப்பவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, சர்வதேச வர்த்தக அரங்கில், இந்தியாவுக்கு பாதிப்பும் ஏற்படும் என்று மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தகவல்.
சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து, மிகப் பெரிய அளவில் போலி சிகரெட்கள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து, சென்னை விமான நிலையம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகிய இடங்களில் வரும் சரக்கு கண்டெய்னர் பார்சல்களை தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்திக் கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி, தாய்லாந்து நாட்டிலிருந்து, சென்னை துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் வந்தது. அதில் வந்த கண்டடைனர்களை, மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் சந்தேகத்தில் சோதனை நடத்தினர். அப்போது அதில் சில கண்டெய்னர்களில் ரூ.10 கோடி மதிப்புடைய, 67.5 லட்சம் சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன. அந்த சிகரெட் அனைத்தும், இந்தியாவில் உள்ள சிகரெட்டுகள் போல், போலியான தயாரிப்புகள் என்பது தெரியவந்தது.
இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், அந்த கண்டைய்னர்களை டெலிவரி எடுக்க வருபவர்களை, கையும் களவுமாக பிடிக்க சில நாட்கள் காத்திருந்தனர். ஆனால் கடத்தல் ஆசாமிகள், மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள் என்பதை தெரிந்தும், சிகரெட்களை டெலிவரி எடுக்க வராமல், தலைமறைவாகி விட்டனர். இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், 10 கோடி மதிப்புடைய 67.5 லட்சம் போலி சிகரெட் பாக்கெட்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி, துபாயிலிருந்து மற்றொரு சரக்கு கப்பல், சென்னை துறைமுகத்திற்கு வந்தது. அதில் வந்த கண்டெய்னர் களை மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் சோதித்த போது, கண்டெய்னர் பகுதியில் பண்டல் பண்டலாக ஏராளமான போலி சிகரெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.ரூ.5 கோடி மதிப்புடைய, 30 லட்சம் போலியான இந்திய சிகரெட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
அடுத்தடுத்து ரூ. 15 கோடி மதிப்புடைய, ஒரு கோடி, போலி இந்திய சிகரெட் பாக்கெட்களை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், இது குறித்து மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படும், இந்தப் போலியான இந்திய சிகரெட்களை, புகைப்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படட்டு, உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் இதை போல் தரம் குறைந்த சிகரெட்களை, இந்திய சிகரெட்டுகள் போல் தயார் செய்வதால், சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், மத்திய புலனாய்வு துறையினர் கூறுகின்றனர்.
இதனால் இந்த போலி சிகரெட்டுகள் தயாரித்து, இந்தியாவுக்குள் கடத்திக் கொண்டு வரும் கடத்தல் கும்பலை, கூண்டோடு பிடித்து, அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்