எம்.கே.பி. நகரில் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பணம் மற்றும் தங்கநகைகளை அபகரித்து மோசடி செய்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
சென்னை, எம்.கே.பி.நகர் பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண்மணி ஒருவர் 2020ம் ஆண்டு எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி, தனக்கு கடந்த 2012ம் ஆண்டு அறிமுகமான பொன்னேரியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் நண்பராக பழகி பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள கூறி பழகி வந்ததாகவும், தனக்கு தெரியாமல் தன்னை ஆபாசமாக படமெடுத்து வைத்துக் கொண்டும், சிறிது சிறிதாக என ரூ.20 லட்சம் பணம் மற்றும் 19 சவரன் தங்க நகைகளை அபகரித்துக் கொண்டும். 2020ம் ஆண்டு தன்னை திருமணம் செய்ய மறுத்தும், தகாத வார்த்தைகளால் பேசியும். ஜாதியை பற்றி இழிவாக பேசியும். கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியதாக புகார் கொடுத்தார்.
அதன்பேரில், இப்புகார் மீது விசாரணை மேற்கொண்டு, SC/ST Act. மோசடி, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சாய் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ்(46) என்பவரை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக, சென்னை, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து 31.07.2024 அன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி வழக்கில் எதிரி ரமேஷ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி ரமேஷுக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000/- அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த எம்.கே.பி.நகர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.