spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கிரிப்டோ கரன்சியில் மோசடி ரூ.100 கோடி சுருட்டியவர்

கிரிப்டோ கரன்சியில் மோசடி ரூ.100 கோடி சுருட்டியவர்

-

- Advertisement -

கிரிப்டோ கரன்சியில் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக (wohlstand ventures) நிறுவனத்தின் இயக்குனர் இல்லத்தை முற்றுகை.

100 க்கும் மேற்பட்டோர் வானகரத்தில் உள்ள சந்திரசேகர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர் (wohlstand ventures) தனியார் நிறுவனம் கிரிப்டோ கரன்சியில் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 5 ஆயிரம் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகார். (wohlstand ventures) நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள் தற்போது சந்திரசேகர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

100 கோடி மோசடி வழக்கில் கிரிப்டோ கரன்சி

we-r-hiring

சென்னை வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45). இவர், ‘கிரிப்டோ கரன்சி’ முதலீடு செய்யும் தொழில் செய்து வந்தார். தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் பலமடங்கு பணம் கிடைக்கும் என கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிட்டதால் அதனை நம்பி இவரிடம் ஏராளமானவர்கள் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

கிரிப்டோ கரன்சியில் ரூ.100 கோடி சுருட்டியவர்

இந்த மோசடி குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் பணத்தை இழந்த பொதும’கள் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஜனவரி மாதம் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். பணத்தை கொடுத்து இழந்த ஒரு சிலர் கடந்த மாதம் சந்திரசேகரை கடத்தி தாக்கிய வழக்கு மதுரவாயல் காவல் நிலையத்தில் பதிவாகி மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

MUST READ