spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ரம்மி விளையாட்டில் ஒரு லட்சம் கட்டினால் ரூ.3 லட்சம் கிடைக்கும்-ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றிய கும்பல்!...

ரம்மி விளையாட்டில் ஒரு லட்சம் கட்டினால் ரூ.3 லட்சம் கிடைக்கும்-ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றிய கும்பல்! தற்கொலை செய்துக் கொண்ட பெண்!

-

- Advertisement -

டெலிகிராம் செயலி மூலம் ரூ.3 லட்சம் மோசடி செய்த வடக்கன் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு தொல்லை அளித்ததால் 4 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆலங்குளத்தில் அரங்கேறியுள்ளது.ரம்மி விளையாட்டில் ஒரு லட்சம் கட்டினால் ரூ.3 லட்சம் கிடைக்கும்-ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றிய கும்பல்! தற்கொலை செய்துக் கொண்ட பெண்!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் அருண்பாண்டி மனைவி ஸ்டெல்லா எஸ்தர் (27). தம்பதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5,4,2 வயதில் 3 மகள்களும் 3 மாத ஆண் குழந்தையும் உள்ளன. அருண்பாண்டி ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். ஸ்டெல்லா எஸ்தர் குடும்பத் தலைவியாக இருந்து வந்தார். இது வரை சாதரண பட்டன் செல்போனையே பயன்படுத்தி வந்த அவர், ஸ்மார்ட் போன் பயன்படுத்தாத நிலையில் 20 தினங்களுக்கு முன்னர் தான் அவரது கணவர் ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்துள்ளார். அதில் வாட்சப், இன்ஸ்டாகிராம் என சாட்டிங் செயலிகளுடன் ரம்மி, லூடோ போன்ற கேம்களையும் இன்ஸ்டால் செய்து விளையாடத் தொடங்கியுள்ளார்.

we-r-hiring

ரம்மி, லூடோவில் வந்த விளம்பரங்களில் ஒன்றினை கிளிக் செய்தார் ஸ்டெல்லா எஸ்தர்.  அது சீப் பைனான்ஸியல் ஆபீசர் என்ற பெயர் கொண்ட டெலிகிராம் கணக்காக இருந்துள்ளது. அதில் சாட் செய்த ஸ்டெல்லா எஸ்தரிடம் பெயர் தெரியாத வடக்கன் 1 லட்சம் முதலீடு செய்தால் பல லட்சமாக திரும்பக் கிடைக்கும் என ஆசை வார்த்தைக் கூறியுள்ளான். கணவர் கூலி வேலை செய்து கஷ்டப்படுகிறார், 4 குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த வடக்கன் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு நான்கே நாள்களில் 3 தவணைகளாக மூன்று லட்சம் ரூபாயை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கணவருக்குத் தெரியாமல் வாங்கியும், தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அடகு வைத்தும் செலுத்தியுள்ளார் ஸ்டெல்லா எஸ்தர்.ரம்மி விளையாட்டில் ஒரு லட்சம் கட்டினால் ரூ.3 லட்சம் கிடைக்கும்-ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றிய கும்பல்! தற்கொலை செய்துக் கொண்ட பெண்!எனினும் லாபத் தொகை அளிக்காமல், மேலும் 11 லட்சம் ரூபாயைக் கேட்டுத் தொல்லை அளித்துள்ளான் அந்த வடக்கன். இதில் மிரண்டு போன ஸ்டெல்லா எஸ்தர், சிக்கலில் மாட்டிக் கொண்டோம் என நினைத்து அதிலிருந்து விடுபடத் தெரியாமல் பயந்து போனார். மனைவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அருண்பாண்டி, ஏன் என கேள்வி கேட்ட போதுதான் மனைவி, தெரியாத நபரிடம் பணம் கொடுத்து ஏமாந்தது தெரிய வந்தது. இதனால் கோபமடைந்த கணவன், மனைவியைக் கண்டித்ததுடன் இதிலிருந்து எப்படி மீழ்வது என இருவருமே தெரியாமல் இருந்துள்ளனர்.

மேலும் இது குறித்து கணவன் மனைவிக்கிடையே தகராறும் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் தேதி ஏடிஎம் கார்டுடன் செல்பி எடுத்து அனுப்புமாறு கூறியுள்ளான் அந்த வடக்கன். இதில் விரக்தியடைந்த அந்த அபலைப் பெண் அட போங்க சார்,  எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். என்னை விட்டு விடுங்கள் நான் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு இறந்து போகிறேன் எனக் கூறியுள்ளார். அப்பவும் அந்த வடக்கன், உங்களால் பணம் ரெடி செய்ய முடியும் என்ற ரீதியிலேயே மெசேஜ் அனுப்பியுள்ளான். மீண்டும் வேறு யாரிடம் போய் பணம் கேட்பது என்று விரக்தியடைந்த அவர், தோட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை அருந்தியுள்ளார். அவர் மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்த உறவினர்கள், அவசரம் அவசரமாக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.ரம்மி விளையாட்டில் ஒரு லட்சம் கட்டினால் ரூ.3 லட்சம் கிடைக்கும்-ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றிய கும்பல்! தற்கொலை செய்துக் கொண்ட பெண்!தனது தாய் உயிரிழந்தது கூடத் தெரியாத 5 வயதைக் கூட நெருங்காத 3 பெண் குழந்தைகள் கண் முழிக்கத் தெரியாத 3 மாதமே ஆன  ஆண் குழந்தை என 4 பேரும் தாயை இழந்துள்ளனர். செல்போன் வாங்கிய 20 தினங்களில் ஆன் லைன் சூதாட்டத்தால் தனது மகள் வாழக்கையை இழந்துவிட்டதாக கண்ணீர் வடிக்கிறார் ஸ்டெல்லாவின் தாய் ஜெயா.

ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுக்களை தமிழ்நாடு அரசு தடை செய்ய முயற்சித்தும் ஆளுநர் ரவி போன்றவர்கள் அதற்கு தடைக்கல்லாக இருக்கின்றனர். இது போன்ற ஆன்லைன் சூதாட்டத்தால் தாயை இழந்து தவிக்கும் 4 குழந்தைகளுக்கும் தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்கி, அவர்கள் கல்விச் செலவுகளையும் ஏற்க வேண்டும் என கூறுகிறார் அவரது உறவினர் அலெக்ஸ்.

இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து ஸ்டெல்லா எஸ்தர் பணம் அனுப்பிய யூபிஐ ஐடி யை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூரில் மது குடிக்க தாத்தா பாட்டியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்த பேரன் – மறுத்தால் விபரீதம்

MUST READ