spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு- 3 பேர் கைது

போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு- 3 பேர் கைது

-

- Advertisement -

ஈரோட்டில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், பத்திர எழுத்தர் உள்ளிட்ட 3 பேரை மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு- 3 பேர் கைது.ஈரோடு செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் 45 வயது ரியல் எஸ்டேட் அதிபர் ரத்தினசாமி. தனது தொழில் விருத்திக்காக, கடந்த 2023ம் ஆண்டு ஈரோடு கவுண்டச்சிபாளையத்தை சேர்ந்த சண்முக ராமசாமி‌ (72) என்பவரிடம் 3 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

இதற்கு ஈடாக மொடக்குறிச்சி அருகே உள்ள 9 ஏக்கர் 66 சென்ட் மற்றும் 95 சென்ட் நிலத்தை சண்முக ராமசாமிக்கும்,  வெள்ளோடு கனகபுரத்தை சேர்ந்த சிவசம்பு  என்பவருக்கும் பொது அதிகாரத்தின் மூலம் அளித்துள்ளார். துவக்கத்தில் வாங்கிய கடனுக்கு முறையாக ரத்தினசாமி வட்டி செலுத்தியுள்ளார்.

we-r-hiring

https://www.apcnewstamil.com/news/india/flight-service-affected-in-chennai-for-second-day/93694

நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் சரிவர கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இந்நிலையில் ரத்தினசாமிக்கு சொந்தமான சுமார் 10 கோடி‌ ரூபாய் மதிப்பிலான 95 சென்ட் நிலத்தை சிவசம்புவின் மனைவி நாகேஸ்வரி மற்றும் சண்முக ராமசாமி பெயரில் தனக்கு தெரியாமல்,  போலியாக சான்று கொடுத்து கிரயம் செய்தது தெரியவந்துள்ளது.

இதில் 30 சென்ட் நிலத்தை சக்தி கணேஷ், சண்முக ராமசாமி மகன் யோக மூர்த்தி பெயரில் கிரயம் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரத்தினசாமி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு- 3 பேர் கைது.இதன் பேரில் விசாரணை நடத்திய ஈரோடு மாவட்ட குற்ற பிரிவு போலீசார், ரத்தினசாமியை ஏமாற்றி மோசடி செய்ததாக சண்முக ராமசாமி, சிவ சம்பு, நாகேஸ்வரி, சக்தி கணேஷ், யோக மூர்த்தி, அவல்பூந்துறையை சேர்ந்த பத்திர எழுத்தர் சங்கர நாராயணன் உள்ளிட்ட 8 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் இன்று காலை சண்முக ராமசாமி, சிவ சம்பு மற்றும் சங்கர நாராயணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான  பத்திர எழுத்தர் சங்கர நாராயணன் மீது ஏற்கனவே மோசடி வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

MUST READ