spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பல ஆண்டுகள் காதல்… அக்கா பெண்ணை திருமணம் செய்த ராணுவ வீரர் - காதலி  தூக்கிட்டு...

பல ஆண்டுகள் காதல்… அக்கா பெண்ணை திருமணம் செய்த ராணுவ வீரர் – காதலி  தூக்கிட்டு தற்கொலை

-

- Advertisement -

காதலித்து பெண்ணை கழட்டி விட்டு விட்டு அக்கா பெண்ணை திருமணம் செய்த ராணுவ வீரர் காதலி  தூக்கிட்டு தற்கொலை!

வேலூர் மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன். அருகிலுள்ள போளூர் தாலுகாவை சேர்ந்த வேட கொல்லைமேடு பகுதியை சேர்ந்த அன்பரசி (28) என்ற பெண்ணை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

we-r-hiring

பல ஆண்டுகள் காதல்… அக்கா பெண்ணை திருமணம் செய்த ராணுவ வீரர் - காதலி  தூக்கிட்டு தற்கொலைஇந்த நிலையில் அவர் அன்பரசியை விட்டுவிட்டு அவருடைய அக்கா பெண்ணான கீர்த்திகாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனால் அன்பரசி உறவினர்கள் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர் காவல் நிலையத்தில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால்

பல ஆண்டுகள் காதல்… அக்கா பெண்ணை திருமணம் செய்த ராணுவ வீரர் - காதலி  தூக்கிட்டு தற்கொலைகடந்த 17 ஆம் தேதி அக்கா பெண் கீர்த்திகாவை பிரபாகரன் திருமணம் செய்துள்ளார். இதனால் மணம் உடைந்த அன்பரசி நேற்று (26-02-25) வீட்டில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜமுனாமரத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரோத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்போது அன்பரசியின் உறவினர்கள் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் அன்பரசி உடலை வாங்கப் போவதில்லை என பிரோத பரிசோதனை கூடத்திற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் உடலை பெற்றுச்சென்றனர்.

MUST READ