spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் மகாவிஷ்ணு

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் மகாவிஷ்ணு

-

- Advertisement -

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் மகாவிஷ்ணு

நீதிமன்ற காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்கிற பெயரில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட மகா விஷ்ணு போலீஸ் கஸ்டடி முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

we-r-hiring

சென்னை அசோக் நகர் அரசு பள்ளி மற்றும் சைதாப்பேட்டை பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட மகாவிஷ்ணு மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக மாற்றுத்திறனாளி சங்கம் அளித்த புகாரின் பேரில் சைதாப்பேட்டை போலீசார் கடந்த சனிக்கிழமை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

அவர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து எழும்பூர் குடியிருப்பு வளாகத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் ஏழு நாட்கள் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை வந்த நிலையில் புழல் மத்திய சிறையில் இருந்து மகாவிஷ்ணு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டார்.

நீதிபதி முன்பு தனக்கு ஜாமீன் மனு தேவை இல்லை என வாபஸ் பெற்ற நிலையில் இந்த வழக்கில் மகாவிஷ்ணுவின் வழக்கறிஞரும் விலகிவிட்டார் என தெரிய வருகிறது. பின்னர் நீதிபதி ஏழு நாட்களுக்கு பதிலாக மூன்று நாட்கள் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அடுத்து தனிப்படை போலீசார் சைதாப்பேட்டையில் வைத்து விசாரணை மேற்கொண்டு அங்கிருந்து திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்கள்(HARD DISKS) பறிமுதல் செய்யப்பட்டு லேப்டாப் வழி முறையில் விசாரணையை துரிதப்படுத்தினர்.

அசோக் நகர் அரசு பள்ளி மற்றும் சைதாப்பேட்டை பள்ளியில் நேரடியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில் மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி நிறைவு பெற்று இன்றைய தினம் எழும்பூர் நீதிமன்ற ஒன்பதாவது அமர்வு நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர்.

ஏற்கனவே அவர் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் மீண்டும் வரும் 20 ஆம் தேதி வரை புழல் மத்திய சிறையில் கிடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மகாவிஷ்ணு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

MUST READ