spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் கொள்ளை - ஒருவர் கைது

வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் கொள்ளை – ஒருவர் கைது

-

- Advertisement -

வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் கொள்ளை – ஒருவர் கைது

வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் 12 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் பணம் திருட்டு. திருடர்களில் ஒருவனை பிடித்து கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள். நகை பணத்துடன் தப்பி ஓடியவர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

we-r-hiring

வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் கொள்ளை - ஒருவர் கைது

ஈரோடு பெரியசேமூர், கன்னிமார் நகரில் சண்முகன் என்பவரின் வீட்டில் 12 சவரன் தங்க நகை, 800 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்ப முயன்றவர்களில் ஒருவனை பிடித்து கட்டி வைத்து பொதுமக்கள் சரமாறியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வெல்டிங் பட்டறை நடத்தி வரும் சண்முகன் கடந்த 25 ஆம் தேதி திருச்சிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்குள் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டுள்ளார்.

 

வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் கொள்ளை - ஒருவர் கைது

இதனையடுத்து, வீட்டில் இருந்த கொள்ளையர்கள் பின்பக்கம் வழியாக தப்பியோடினர். சண்முகன், அங்கு திரண்ட ஊர்மக்கள் உதவியுடன் கொள்ளையர்களில் ஒருவனை பிடித்து கட்டிவைத்து சரமாறியாக தாக்கினர்.

பின்னர் வடக்கு காவல்நிலைய போலீசாரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர். நகை, பணத்துடன் தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ