spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பங்குச்சந்தை ஆசை காட்டி  மோசடி செய்தவர் கைது

பங்குச்சந்தை ஆசை காட்டி  மோசடி செய்தவர் கைது

-

- Advertisement -

பங்குச்சந்தை ஆசை காட்டி  மோசடி செய்தவர் கைது

சென்னை கொரட்டூர் வாட்டர் கெனால் சாலையை சேர்ந்த அஸ்வத் (32)  ‘எஸ். பி. கே. எக்ஸ்போர்ட்’ என்ற பெயரில், வேர்க்கடலை ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் 4 ம் தேதி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட்’ என்ற பெயரில் விளம்பரம் ஒன்று வெளி வந்துள்ளது. அதை ஆர்வமுடன் பார்த்தை தெரிந்து, சில மர்மநபர்கள் அஸ்வத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

we-r-hiring

பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, ஆசை வார்த்தை கூறி  அவர்களை நம்பி, அவர்கள் கொடுத்த வங்கி கணக்குகளில் ரூ29. 06 கோடியை அஸ்வத் முதலீடு செய்துள்ளார். ஆனால், அவருக்கு வர வேண்டிய கமிஷன் மற்றும் முதலீடு தொகையை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பங்குச்சந்தை ஆசை காட்டி  மோசடி செய்தவர் கைது

இந்நிலையில், ஏமாற்றப்பட்டதை அறிந்த அஸ்வத் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரித்த ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீசார், மோசடிக்காரர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கை வைத்து, சென்னை, திருவல்லிக்கேணி, கானா பாக் தெருவைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் (34) என்பவரை கைது செய்தனர்.

முழுநேர புகைப்பட கலைஞராக மாறிய ஷங்கர் பட நடிகை

விசாரணையில், பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பலரை ஏமாற்றி, முகமது இப்ராஹிம் பல கோடி ரூபாய் சுருட்டியது தெரிய வந்துள்ளது. பின்னர் போலீஸார், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று (ஜூலை 2) சிறையில் அடைத்தனர்.

MUST READ