திருமணம் செய்து கொள்வதாக கூறி விடுதியில் வைத்து பலாத்காரம் செய்த காதலன் மீது காதலி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகாா் அளித்துள்ளாா்.
சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 25 வயதான இளம்பெண், நேற்றுமுன்தினம் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகாா் அளித்துள்ளாா். அதில் அண்ணாநகரில் வசித்து வருதாகவும், அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றுவதாகவும் அதே தனியார் கம்பெனி நிறுவனத்தில் பணிபுரியும் 23 வயது வாலிபருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொள்வதாக கூறி தனியார் விடுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளாா். இதன்பிறகு சரியாக பேசுவதில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டால் போனை எடுத்து பேசுவது கிடையாது.
தனியாக சந்தித்து எதற்காக பேச மறுக்கிறாய் என்று கேட்டபோது, அந்த வாலிபர் உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறியுள்ளாா். அத்துடன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து வருகின்றனர். எனவே, இனிமேல் எந்த நேரத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளாா். காதலித்து திருமணம் செய்வதாக கூறி பாலியல் ரீதியாக மனவேதனை ஏற்படுத்திய காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இதன் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து காதலன் வீட்டிற்கு சென்று பாா்த்த போது அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி போலீசாா் தேவருகின்றனர்.
இன்று முதல் குப்பைக்கும் வரி… ஆத்திரத்தில் சொத்து உரிமையாளர்கள்..!