கேரளாவில் செலவுக்கு பணம் அனுப்பாததால் ஒரு வயது குழந்தையை கொடுமைப்படுத்தி கணவனுக்கு வீடியோவை அனுப்பிய தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடும்ப சண்டையில் கணவனை மிரட்டுவதற்கு ஒரு வயது குழந்தையை பெற்ற தாயே கொடுமைப்படுத்தி வீடியோ எடுத்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குழந்தையை பெற்ற தாயே கொடுமைப்படுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக கேரள குழந்தைகள் உரிமை குழு மற்றும் கேரளா காவல்துறை விசாரணை நடத்தினார். அப்போது கேரளா ஆலப்புழா பகுதியை சேர்ந்த அனிஷா என்பவர் தான் தனது ஒரு வயது குழந்தையை கொடுமைப்படுத்தியது தெரிய வந்தது.
அனிஷாவை பெற்ற குழந்தையை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் கேரள போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனிஷாவிடம் விசாரணை நடத்தியதில் கேரளா ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த நஜீபுதீன் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
நஜீபுதீன் நான்காவது திருமணமாக அனிஷாவை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஒரு வயது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திருமணமாகி சில நாட்களுக்குப் பிறகு நஜீபுதீன் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார்.
வெளிநாட்டுக்குச் சென்றவர் முறையாக மனைவி மற்றும் குழந்தையின் மாதாந்திர செலவுக்கு பணம் அனுப்பாததால் கணவன் மனைவியுடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த அனிஷா தனது ஒரு வயது குழந்தையை கொடுமைப்படுத்தி வீடியோ ஒன்றை எடுத்து கணவனுக்கு whatsappபில் அனுப்பி வைத்துள்ளார்.
செலவுக்கு பணம் அனுப்பவில்லை என்றால் தொடர்ந்து கொடுமைப்படுத்துவேன் எனவும் தாய் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை பார்த்து கணவன் உடனடியாக பணத்தை அனுப்பி விடுவார் என நினைத்து அத்தகைய செயலில் ஈடுபட்டதாக கைதான தாய் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மோடியின் 3.o கூட்டத்தில் 2 கோடி இலவச வீடுகள் (apcnewstamil.com)
தாயின் இந்த வாக்குமூலம் கேட்டு விசாரணை செய்த கேரள போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநில குழந்தை உரிமைகள் குழுவும் தானாக முன்வந்து விசாரணையை துவங்கியது. தாயிடம் இருந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் குழந்தையை இரக்கமற்ற முறையில் கொடுமை செய்த தாய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆலப்புழா போலீசாருக்கு மாநில குழந்தை உரிமைகள் குழு கேட்டுள்ளது.
இதன் காரணமாக குழந்தையை எத்தனை முறை அனிஷா கொடுமைப்படுத்தி உள்ளார் என்பது குறித்தும் குழந்தையின் தந்தையை அழைத்து விசாரணை நடத்தவும் கேரள போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கனடாவில் 28 வயது இந்தியர் கொலை – அதிர்ச்சி சம்பவம் (apcnewstamil.com)
தாய் அனிஷாவிடம் விசாரணை நடத்திய பிறகு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்துள்ளனர். பணத்திற்காக ஒரு வயது பிஞ்சு குழந்தையை பெற்ற தாயே கொடுமைப்படுத்திய சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.