வரும் 31ஆம் தேதி நாடு திரும்பி சிறப்பு புலனாய்வு குழு முன்பு விசாரணைக்கு ஆஜராக உள்ளேன் என்று வெளிநாட்டில் பதுங்கி உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டுள்ளார்.


பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா தற்பொழுது கைதுக்கு பயந்து வெளிநாட்டில் பதுங்கி உள்ளார். அவரது பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்று கர்நாடகா அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் தான் வரும் 31ஆம் தேதி நாட்டிற்கு திரும்பி காலை 10 மணி அளவில் சிறப்பு புலனாய்வு குழு முன்பு விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தேர்தல் நிறைவடைந்த உடன் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி நான் வெளிநாட்டிற்க்கு சுற்றுலா வந்தேன் அப்பொழுது என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை சிறப்பு புலனாய்வுக்குழுவும் அமைக்கப்படவில்லை.

நான் வெளிநாட்டுக்கு வந்த பிறகு என் தொடர்பான செய்திகளை யூடியூப் பக்கத்தில் பார்த்து தெரிந்து கொண்டே இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டு நான் என்னையே தனிமைப்படுத்திக் கொண்டேன். என் அரசியல் வளர்ச்சியை பிடிக்காத நபர்கள் என் மீது இந்த பழியை சுமத்தியுள்ளனர். நான் 31ஆம் தேதி வெளிநாடு திரும்பி விசாரணைக்கு ஆஜராகி எனது விளக்கத்தை தெரிவிப்பேன் என்றும்
நீதிமன்றம் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்த நிலைமை ஏற்பட்டதற்கு நான் எனது தாத்தாவிடமும் பெற்றோர்களிடமும் முன்னாள் முதல்வர் குமாரசாமி இடமும் கட்சி தொண்டர்களிடமும் மன்னிப்பு கோரிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
