யூட்யூபில் பார்த்து மாடுகளை வாங்குவதற்காக ராஜஸ்தானில் உள்ளவருக்கு பணம் செலுத்தி ஏமாந்த தெலுங்கானா விவசாயி
தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் முத்தி ரெட்டி குடேம் கிராமத்தை சேர்ந்த விவசாய கொண்டய்யா. இவர் பசுக்களை வாங்க யூடியூப்பில் பசுக்களைத் தேடி பார்த்துள்ளார். அதில் ஒரு வீடியோவில் ராஜஸ்தானைச் சேர்ந்த குமார் ஜெய் என்பவரின் வீடியோவை பார்த்து மூன்று பசுக்களை வாங்க போன் செய்து ஆர்டர் செய்தனர்.
இதற்காக கடந்த மாதம் 5 ஆம் தேதி, கொண்டய்யாவிடன் மாடுகளை அனுப்புவதற்கான வாகனச் செலவுக்காக குமார் ஜெய்க்கு ₹.15,000 அனுப்பும்படி கேட்டு கொண்டார்.
இதனால் கொண்டய்யா போன் பே மூலன் பணம் செலுத்தினார். மீதமுள்ள பணம் மாடுகள் வந்த பிறகு போன் பே மூலம் செலுத்துவதாகக் கூறினார். ஆனால் மாடுகள் சொன்னப்படி வராததால் கொண்டய்யா மீண்டும் ராஜஸ்தானைச் சேர்ந்த குமார் ஜெய்க்கு போன் செய்தார். மாடுகள் தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை அருகே வாகனத்தில் வந்து கொண்டு இருப்பதாகவும் மீதமுள்ள முழுத் தொகையும் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
இதனால் ₹ .84 ஆயிரம் போன் பே மூலம் செலுத்தினார். ஆனாலும் பசு மாடுகள் வராததால், பாதிக்கப்பட்ட கொண்டையா, ராஜஸ்தானில் உள்ள குமார் ஜெய்க்கு போன் செய்தார். ஆனால் போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் தான் ஏமாந்ததை உணர்ந்த கொண்டையா அவரது மகன் பாலராஜு மூலம் ஐதராபாத் எல்.பி.நகரில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அவர்களின் புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட புவனகிரி கிராமப்புற போலீசார் கொண்டையாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட கொண்டய்யா இழந்த பணத்தை மீட்டு தரும்படி கேட்டு கொண்டார்.