Homeசெய்திகள்க்ரைம்பிரபல யூடியூபா் டி.டி.எஃப் வாசன் மீண்டும் கைது

பிரபல யூடியூபா் டி.டி.எஃப் வாசன் மீண்டும் கைது

-

பிரபல யூடியூபா் டி.டி.எஃப் வாசன் மீண்டும் கைது

மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் செல்போனில் பேசியபடி காரை அஜாக்கிராதையாக ஓட்டியதாக டிடிஎப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து TTF வாசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல யூடியூபா் டி.டி.எஃப் வாசன் மீண்டும் கைது

பைக் ரேஸரான TTF வாசனுக்கு வழக்கு ஒன்றில் 10ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் TTF வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றி வருகிறார். அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவுசெய்துவருகிறார்.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு வண்டியூர் டோல்கேட் பகுதியில் TN 40 AD 1101 என்ற காரை அஜாக்கிரதையாகவும் கவன குறைவாகவும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவதும் அச்செயலை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவு செய்து Twin Throttlers என்ற ID ல் YOUTUBE சேனலில் பதவிட்டுள்ளதாக மதுரை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளரான சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி என்பவர் அளித்த புகாரின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் பைக்ரேஸரான TTF வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பிரபல யூடியூபா் டி.டி.எஃப் வாசன் மீண்டும் கைது

ஏற்கனவே பைக் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் போது காரில் பேசியபடி ஆபத்தை விளைவிக்கும் வகையில் காரை இயக்கியதாக TTF வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் வாசனை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் பேசியபடி கார் ஒட்டியதாக நேற்று கைது செய்யப்பட்டிருந்த வாசன் மீது வேகமாக வாகனம் ஓட்டுதல், சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மே 28 அன்று அண்ணாநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

பிரபல யூடியூபா் டி.டி.எஃப் வாசன் மீண்டும் கைது

தற்போது மேலும் ஒரு பிரிவாக – பிறருக்கு மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன் ஒரு காரியத்தை செய்தல் (308) என்ற ஒரு பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் மூலம் இவர் உடனடியாக பிணையில் வர முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

MUST READ