Homeசெய்திகள்க்ரைம்நகை கடைகள் நடத்தி ரூ.100 கோடி மோசடி

நகை கடைகள் நடத்தி ரூ.100 கோடி மோசடி

-

தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, உட்பட 11 இடங்களில் நகை கடை நடத்தி வருபவர் சேலம் வலசையூரை சேர்ந்த சபரிசங்கர் (35).

சுமார் நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி

சுமார் நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து தலைமறைவாக இருந்து வந்த இவரை தருமபுரி பொருளாதார குற்றபிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

பொங்கும் தங்கம் ” என்ற பெயரில் பழைய நகைகளுக்கு புதிய நகைகள் தருவதாகவும், குறிப்பிட்ட தொகையை மாதம் மாதம் தவணை முறையில் முதலீடு செய்து வந்தால், செய்கூலி சேதாரமின்றி நகையை பெற்றுக்கொள்ளலாம் என கவர்ச்சிகரமான தீபாவளி சீட்டு நடத்தி பணம் வசூலித்து 2023 ம் ஆண்டு தீபாவளி சமயத்தில் கடையை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளார் சபரிசங்கர்.

பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் அடுத்தடுத்து கொடுத்த புகாரின் பேரில் பாண்டிச்சேரியில் பதுங்கியிருந்த சபரி சங்கரை கைது செய்துள்ளனர்.

தருமபுரி மற்றும் அரூரில் செயல்பட்டு வந்த SVS ஜூவல்லரி ஆகிய இரண்டு கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி பொருளாதார குற்றபிரிவு போலீசார் நடவடடிக்கை எடுத்து வருகின்றனர்.

MUST READ