spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வியாசர்பாடியில் ரூ.14.75 லட்சம் ஹவலா பணம் பிடிப்பட்டது

வியாசர்பாடியில் ரூ.14.75 லட்சம் ஹவலா பணம் பிடிப்பட்டது

-

- Advertisement -

வியாசர்பாடியில் ரூ.14.75 லட்சம் ஹவலா பணம் பிடிப்பட்டது

வியாசர்பாடியில் ரூ.14.75 லட்சம் ஹவலா பணம் பிடிப்பட்டது, போலீசில்  சிக்கிய ஒருவர்

சென்னை வியாசர்பாடி காவல்நிலைய போலீசார் அரவிந்த் தலைமையில் ஆன காவலர்கள் எருக்கஞ்செரி நெடுசாலையில் உள்ள இராமலிங்க அடிகளார் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.

we-r-hiring

இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த 14.75 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கொண்டு சென்றதால் அந்த பணத்தை பறிமுதல் செய்து இருசக்கர வாகனத்தில் வந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

பின்பு விசாரணையில் அவரா சவுக்கார்பேட்டை மின்ட் பகுதியை சேர்ந்த மோகன்லால் (45) என்பது தெரியவந்தது. இவர் புளியந்தோப்பு பகுதியில் வசிக்கும் சுல்தான் பாய் என்பவரிடம் ரூ.14.75 லட்சம் ரூபணத்தை வாங்கி சென்று பர்மா பஜாரில் உள்ள மற்றொரு நபரிடம் கொடுப்பதற்கு சென்ற போது போலீசில் சிக்கியுள்ளார்.

திருமணம் செய்வதாக கூறி பணம், நகை மோசடி- 5 ஆண்டு சிறை

ஹவாலா பணம் பிடிபட்டது குறித்து வியாசர்பாடி போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்களிடம் பிடிபட்ட பணம் மற்றும் சம்பந்தப்பட்ட நபரை ஒப்படைத்தனர்.

ஹவாலா பணம் கொண்டு சென்ற மோகன்லால் இடம் போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ