Homeசெய்திகள்க்ரைம்சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு - 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

-

- Advertisement -

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் காவல்துறையினர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விபரம் இம்மாதம் 30 ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு - 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது கடையை மூடாததால் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது காவல் நிலையத்தில் போலீசார் கொடூரமாகத் தாக்கியதால் இருவரும் பலத்த காயமடைந்து அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

we-r-hiring

இந்த வழக்கில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து நீதிபதி வாசித்த தீர்ப்பில், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது. மரணங்களை விளைவிக்க கூடிய வகையில் காயங்கள் இருந்ததுள்ளது. அதனால் தந்தை மகன் ஆகிய இருவரையும் கொலைசெய்ததாக சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையை பதிவு செய்துள்ளது.

இவர்களின் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ செய்யப்பட்டுள்ளது. அவர்களது உடலில் உள்ள காயங்கள் வெளிப்படையாக சாதாரண காயங்களாக இருந்துள்ளது. ஆனால் உள்புறம் இருந்த காயம் பலமுறை தாக்கியதால் ஏற்பட்ட காயம் என்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததுள்ளது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் உடலில் இருந்த காயங்கள் தாங்களாகவே ஏற்படுத்தி காயங்கள் என கூற முடியாது. உயிரிழந்த பென்னிக்ஸ் தன்னை இரவு முழுவதும் பத்து நிமிட இடைவெளி விட்டுவிட்டு தொடர்ந்து தாக்கியதாகவும், 200 முறைக்கு மேல் தன்னை பின்னால் தாக்கியதாக அவரது உறவினரிடம் கூறியதாக குற்றப் பத்திரிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அடிக்கச் சொன்னதால்தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தாக்கியதாகவும், கைகளை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு தாக்கியுள்ளதாகவும், டேபிளில் படுக்க வைத்தும் தாக்கி உள்ளனர் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தாக்கும்போது நாம் அடித்து பழகுவதற்கு அப்பா மகன் கிடைத்துள்ளனர் எனவும் இவர்களை அடித்து நாம் பயிற்சி எடுத்துக் கொள்வோம் என காவல்துறையினர் அவர்களுக்கும் பேசிக் கொண்டதாகவும் குற்றப் பத்திரிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீதும் போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காயமடைந்த தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் அணிந்திருந்த ஆடைகள் வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த ரத்தக்கரை படிந்த ஆடையை  உறவினர்களிடம் கொடுத்து குப்பை தொட்டியில் போட சொல்லி உள்ளார்கள் சம்பந்தப்பட்ட காவல்துறையினர். அந்த ஆடையை கைப்பற்றி வழக்கு விசாரணைக்கு உட்படுத்தவில்லை. இந்த வழக்கில் சிபிஐ தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது.

இந்த வழக்கில் அனைத்து தடைகளையும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அழித்துள்ளனர். இந்த வழக்கினுடைய அனைத்து தரப்பு விசாரணைகளையும் பார்க்கும்போது சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என இந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு நீதித்துறையின் மீதான நம்பிக்கையையும், காவல் துறையின் பொறுப்புணர்வையும் மீண்டும் ஒருமுறை நிலைநாட்டியுள்ளது.

சாத்தான்குளம் வழக்கு… காவல் ஆய்வாளர் மருத்துவ சிகிச்சைகளைப் வெளியில் பெற உச்சநீதிமன்றம் அனுமதி!!

MUST READ