spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பள்ளி ஆசிரியையின் தாலி செயின் பறிப்பு - இரு இளைஞர்கள் கைது

பள்ளி ஆசிரியையின் தாலி செயின் பறிப்பு – இரு இளைஞர்கள் கைது

-

- Advertisement -

பள்ளி ஆசிரியையின் தாலி செயின் பறிப்பு - இரு இளைஞர்கள் கைதுமணப்பாறை அருகே தனியார் பள்ளி ஆசிரியையிடம் தாலி செயின் பறித்த வாலிபர்கள் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் கீர்த்தனா (26). இவர் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 28 ம் தேதி வீட்டிலிருந்து பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சாபி தாபா அருகே செல்லும்போது பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில்
வந்த இரண்டு மர்ம நபர்கள் கீர்த்தனா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தாலி செயினை பறித்து சென்றுள்ளனர்.

we-r-hiring

இதுகுறித்து வழக்கு பதிந்த துவரங்குறிச்சி போலீசார் திருச்சி, மேலவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பார்த்தசாரதி (20), பழனி அருகே உள்ள மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த அரவிந்தன் (எ) வெள்ளையராஜா (29) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

பின்னர் அவர்களிடமிருந்து கீர்த்தனாவின் தாலி செயின் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இன்ஸ்டா பழக்கத்தில் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த மாணவி- வசமாக சிக்கிய வாலிபர்

MUST READ