spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்முதல்வர், துணை முதல்வர் குடும்பம் குறித்து அவதூறு பேச்சு - காமெடி நடிகர் போசானி கிருஷ்ண...

முதல்வர், துணை முதல்வர் குடும்பம் குறித்து அவதூறு பேச்சு – காமெடி நடிகர் போசானி கிருஷ்ண முரளி கைது!

-

- Advertisement -

முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண் குடும்பம் குறித்து அவதூறாக பேசி வந்த காமெடி நடிகர் போசானி கிருஷ்ண முரளி கைது செய்த ஆந்திர போலீசார்!போசானி கிருஷ்ண முரளிக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் வழக்கறிஞர்கள்!

முதல்வர், துணை முதல்வர் குடும்பம் குறித்து அவதூறாக பேச்சு - காமெடி நடிகர் போசானி கிருஷ்ண முரளி கைது!
டோலிவுட் காமெடி நடிகரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளரான போசானி கிருஷ்ண முரளி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின் போது தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வந்தார். இந்த நிலையில் ஆந்திராவில் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆந்திராவில் பல இடங்களில் போசானி கிருஷ்ண முரளி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

we-r-hiring

அன்னமய்யா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் போலீசார் நேற்று ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று போசானியைக் கைது செய்தனர். இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுப்பதற்கான ஏற்பாடுகள் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், போசானி கைது செய்யப்பட்டதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தார். ஐதராபாத்தில் உள்ள அவரது மனைவி போசானி குசுமலதாவிற்கு போனில் பேசினார்.

ஆந்திராவில் கூட்டணி அரசு கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வருவதாகவும், இந்தக் கைது நடவடிக்கையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அவருக்கு தேவையான உதவிகளை செய்யும் என்று உறுதியளித்தார். கூட்டணி அரசாங்கத்தில் நடக்கும் விவகாரங்களை மக்களும் கடவுளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே கடினமான காலங்களில் தைரியமாக இருக்க வேண்டும். போசானி கிருஷ்ண முரளியின் மனைவிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாக சட்ட உதவி வழங்குவதாக ஜெகன் மோகன் உறுதியளித்தார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே கட்சியின் மூத்த வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜெகன் மோகன் அவரிடம் கூறினார்.

அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ஒபுலவாரிபள்ளே காவல் நிலையத்திற்கு போசானியை அழைத்து வந்த பிறகு, முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் தயாராகி வருவதால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் அங்கு சென்று ஜாமின் பெற முயன்று வருகின்றனர்.

MUST READ