Homeசெய்திகள்க்ரைம்வேன் மோதி சாப்ட்வேர் என்ஜினியர் பலி

வேன் மோதி சாப்ட்வேர் என்ஜினியர் பலி

-

பள்ளிக்கரணை, கார்மேல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் (27) பெங்களூரில்  உள்ள ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார்.

வேன் மோதி சாப்ட்வேர் என்ஜினியர் பலிஇந்த நிலையில் நேற்று இரவு வேளச்சேரியில் உள்ள நண்பரை பார்த்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வேளச்சேரி மெயின் சாலை வழியாக வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். மயிலை பாலாஜி நகர் சிக்னல் அருகே  இரவு 12.45 மணி அளவில் வந்த போது எதிரே வந்த வேன் அவர் மீது நேருக்கு நேர் மோதியது இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சம்பவம் குறித்த தகவலின் பேரில் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதீஷ் பிரேதத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து பெரும்பாக்கம், எழில் நகரை சேர்ந்த வேன் டிரைவர் திருமலை(42) கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

MUST READ