spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து கொலை மிரட்டல்…15 சவரன் நகை கொள்ளை!

பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து கொலை மிரட்டல்…15 சவரன் நகை கொள்ளை!

-

- Advertisement -

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்து வீட்டின் உள்ளே நுழைந்து 4 மர்ம நபர்கள் கணவன் மனைவியை தாக்கி 15 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் திருட்டு போலிசார் விசாரணை.

பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து கொலை மிரட்டல்…15 சவரன் நகை கொள்ளை!திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் வீரபத்திரன் (31) இவர் தன்னுடைய வீட்டில் குடும்பத்தாருடன் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த நான்கு மர்ம நபர்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.

we-r-hiring

அப்போது வீரபத்ரனின் தாயார் கதவை திறந்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் உள்ளே புகுந்து வீரபத்திரன் மற்றும் அவருடைய தாயார் மற்றும் அவருடைய மனைவி ஆகியோரை கத்தி முனையில் தாக்கி மேலும் விடியற்காலை முதல் அவர்களை கத்தி முனையில் வைத்து பணம் நகை எங்கே மற்றும்  வீரபத்திரனின் மனைவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி சித்திரவதை  செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து கொலை மிரட்டல்…15 சவரன் நகை கொள்ளை!அதன் பின்னர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இந்த நிலையில் வீரபத்திரனின் தலையில் கத்தியால் வெட்டியும் அதேபோல வீரபத்திரனின் மனைவியான சத்தியாவின் கையில் கத்தியால் வெட்டியும் உள்ளனர் இதன் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளைகளை தேடி வருகின்றனர்.

MUST READ