சென்னை மாணவிக்கு ஐதராபாத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்று தருவதாக வரவழைத்து கூட்டு பாலியியல் பலாத்காரம் செய்த இரண்டு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனா்.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 20 வயதான பெண் சென்னையில் இறுதியாண்டு பயோமெடிக்கல் படித்து வருகிறார். அதே வகுப்பில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அவரது நண்பர் அஜய் படித்து வருகிறார். இவர்களது பழக்கத்தின் அடிப்படையில் அஜய் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிப்பதாக கூறி ஐதராபாத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர் குகட்பள்ளியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கியிருந்த இளம் பெண்ணை அஜய் தனது நண்பர் ஹரியின் பிளாட்டுக்கு விருந்துக்கு அழைத்திருப்பதாக கூறி அழைத்து சென்றார். ஹரியும் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஐதராபாத்தில் தங்கி சமோசா வியாபாரம் செய்து வருகிறார்.

அஜய்யும், ஹரியும் ஒரே மாநில நண்பர்கள் என்பதால் விருந்துக்கு அழைத்ததும், அந்த பெண்ணும் நம்பி நிஜாம்பேட்டையில் உள்ள ஹரியின் பிளாட்டுக்கு அவருடன் சென்றார். பிளாட்டுக்குச் சென்ற பிறகு, அஜய்யும், ஹரியும் அந்த இளம் பெண்ணை மது குடிக்க கட்டாயப்படுத்தி, போதையில் இருந்த போது இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். மயக்கம் தெளிந்த பின் இளம் பெண் பச்சுப் பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.