வரதட்சணை கொடுமை வழக்கில் சம்மந்தப்பட்டு தற்போது தலைமறைவான இன்ஸ்பெக்டர், காவலரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.மதுரையில் வரதட்சணை கொடுமைக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் இளம்பெண் தங்கப்பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர் – அப்பன் திருப்பதி காவலராக பணியாற்றி வரும் பூபாலன், அவரது மாமனார் – விருதுநகர் சாத்தூரில் ஆய்வாளராக பணியாற்றி வரும் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் மீது அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் தலைமறைவாகி விட்டதால் அவர்களை கைது செய்வதற்காக, மாவட்ட எஸ்.பி.யின் உத்தரவில் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி பாலசுந்தரம் தலைமையில் ஆய்வாளர் சாந்தி, சார்பு ஆய்வாளர்கள் கார்த்தி, பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படை போலீசார் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! மூன்று டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை…
