spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மகளின் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க சென்றவர் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை

மகளின் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க சென்றவர் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை

-

- Advertisement -

மகளின் திருமண அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்களுக்கு  வழங்க சென்ற நேரத்தில்  வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் ஐந்து  பேர் கொண்ட கும்பல் ₹ 3.5 கோடி மதிப்புள்ள தங்க, வைர ஆபரணங்கள், ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளை.திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க சென்றவர் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் உள்ள ராஜஹம்சா வில்லாஸ் உயர்ரக குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் வெங்கடசிவா ரெட்டி. அவருடைய மகளுக்கு அடுத்த மாதம் 7 ம் தேதி  திருமணம் நடைபெற உள்ளது.

we-r-hiring

எனவே திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு வழங்க நேற்று சென்றிருந்தார். இந்நிலையில் அவரது வில்லா அருகே உள்ள மற்றொரு இரண்டு வீடுகளில் கொள்ளையர்கள் திருட வந்தது கண்டறிந்தனர். ஆனால் அங்கு வீட்டில் உரிமையாளர்கள் இருந்ததால் எதுவும் திருடு போகவில்லை.  இதனை அறிந்த அங்கிருந்து காவலர் வெங்கட சிவா ரெட்டி வீட்டில் கொள்ளை நடந்ததா என பார்ப்பதற்காக  நள்ளிரவு 2.30 மணிக்கு வந்து பார்த்துள்ளார் அப்பொழுது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வெங்கட சிவா ரெட்டிக்கு போன் செய்து தெரிவித்தார்.

இதனையடுத்து வெங்கட சிவா ரெட்டி திருமண அழைப்பிதழை கொடுப்பதை பாதியில் நிறுத்திவிட்டு  வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பார்த்தபோது  பீரோ லாக்கரை உடைத்து திறந்து அதில் இருந்த  ₹ 20 லட்சம்  பணம், வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் விலை  உயர்ந்த பல்வேறு ஆபரணங்கள் ஆகியவை உள்ளிட்ட ₹ 3.5 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையர்கள் கொலையடித்து சென்றது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த வெங்கட சிவா ரெட்டி அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில்  பதிவாகி இருக்கும் 5 கொள்ளையர்கள் தொடர்பான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

பேஸ்புக் மூலமாக 5 ரூபாய் நோட்டு கொடுத்தால் ரூ. 3 லட்சம் தருவதாக மோசடி!

MUST READ