spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ரோடு ரோலரையே லவட்டிய பலே திருட்டு கில்லாடிகள்... வசமாக சிக்கிய தந்தை -மகன்..!

ரோடு ரோலரையே லவட்டிய பலே திருட்டு கில்லாடிகள்… வசமாக சிக்கிய தந்தை -மகன்..!

-

- Advertisement -

சென்னை ஷெனாய் நகரில் அமைந்துள்ள தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்று மீஞ்சூரில் சாலை பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஆந்திர பதிவெண் கொண்ட பழங்கால 3 இரும்பு சக்கரங்களை கொண்ட ரோடு ரோலரை பயன்படுத்தி சாலை அமைத்தனர். மழை காலம் வந்தால், மண் வாசனை, தேர்தல் காலம் வந்தால் தார் வாசனை என கூறுவது உண்டு. தார் வாசனை மட்டுமின்றி சாலைகளில் சத்தம் எழுப்பியபடியே மெல்ல ஊர்ந்து செல்லும் ரோடு ரோலர் சிறுவர்களை மிகவும் கவரும்.

ரோடு ரோலரையே லவட்டிய பலே திருட்டு கில்லாடிகள்... வசமாக சிக்கிய தந்தை -மகன்..! முழுக்க இரும்பு சக்கரங்களால் உருவாக்கப்பட்ட பழங்கால ரோடு ரோலர் பயன்படுத்தப்பட்டு சாலை பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலை வழியே செங்குன்றம் நோக்கி கட்டுமான நிறுவன அலுவலகத்திற்கு ரோடு ரோலரை அதன் ஓட்டுநர் ஓட்டிச் சென்றார். சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நல்லூர் சுங்கச்சாவடி அருகே வந்த போது ரோடு ரோலர் பழுதடைந்தது. அங்கிருந்து மேற்கொண்டு செல்ல முடியாததால் ரோடு ரோலரை நல்லூர் சுங்கச்சாவடி அருகே நிறுத்தி விட்டு ஓட்டுநர் அலுவலகம் சென்றுள்ளார்.

we-r-hiring

ரோடு ரோலரையே லவட்டிய பலே திருட்டு கில்லாடிகள்... வசமாக சிக்கிய தந்தை -மகன்..!அவ்வப்போது வந்து ரோடு ரோலரை பார்த்து சென்ற நிலையில் கடந்த ஜனவரி மாதம் வந்து பார்த்த போது  ரோடு ரோலர் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து காணாமல் போனது கண்டு கட்டுமான நிறுவன ஊழியர்கள் திடுக்கிட்டு உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கட்டுமான நிறுவன பொறியாளர் தினகரன் காணாமல் போன ரோடு ரோலரை கண்டுபிடித்து தருமாறு சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்கமாக வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனத்தை காணவில்லை, கார் காணவில்லை, லாரி காணவில்லை போன்ற புகார்களை சந்தித்த காவல்துறையினர் வடிவேலு திரைப்பட நகைச்சுவையில் வரும் கிணற்றை காணவில்லை என்பது போல ரோடு ரோலரை காணவில்லை என வந்த புகாரை கண்டு சற்று திகைப்பும், அதிர்ச்சியும் அடைந்தனர். தொடர்ந்து கட்டுமான நிறுவன பொறியாளர் தினகரன் அளித்த புகாரின் பேரில் சோழவரம் காவல்துறையினர் BNS 303(2) பிரிவில் திருட்டு வழக்கு பதிவு செய்து குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சாலைகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா மற்றும் சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் லாரி ஒன்றில் ரோடு ரோலர் கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகளின் அடிப்படையில் லாரியின் பதிவெண் கொண்டு குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கினர். தொடர் விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கத்தை சேர்ந்த தந்தை கோபிநாத் 52, மகன் அலெக்ஸ் 36, வெங்கடேசன் 34, ஆகிய மூவரை கைது செய்து நடத்திய விசாரணையில் ரோடு ரோலரை திருடி சென்றது உறுதியானது.

இதனையடுத்து திருடிச் செல்லப்பட்ட ரோடு ரோலர், திருட்டுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை சோழவரம் குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மூவரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த திருட்டில் தொடர்புடைய சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ரோடு ரோலரை திருடி சென்ற கும்பலை கைது செய்த குற்றப்பிரிவு போலீசாரை காவல் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

MUST READ