spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கணவருடன் கோபித்துக் கொண்டு தோழி வீட்டில் சென்ற பெண்ணின் நகை, பணம் காணவில்லை…!

கணவருடன் கோபித்துக் கொண்டு தோழி வீட்டில் சென்ற பெண்ணின் நகை, பணம் காணவில்லை…!

-

- Advertisement -

சென்னை ஏழு கிணறு போர்த்துக்கீசியர் தெருவை  சேர்ந்த 54 வது பெண் பதர்நிஷா பேகம் . இவரது கணவர் துணிக்கடை வைத்துள்ளார்.

கணவருடன் கோபித்துக் கொண்டு தோழி வீட்டில் சென்ற பெண்ணின் நகை, பணம் காணவில்லை…!கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நவம்பர் 13 ஆம் தேதி தேதி வீட்டில் இருந்த 70 சவரன் நகை, 4 லட்சம் பணம் மற்றும் துணிகளை ஒரு பெட்டியில் எடுத்துக்கொண்டு ஏழு கிணறு பிரம்மானந்தா தெருவில் வசிக்கும் தனது தோழி  ராசாத்தி என்பவரின் வீட்டில் வைத்துவிட்டு அங்கேயே தங்கியுள்ளார்.

we-r-hiring

நவம்பர் 15 ஆம் தேதி இரவு சுமார் 11.30 மணி அளவில் தனது பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் இருந்த நகை மற்றும் பணத்தை காணவில்லை என்றும், அதைப்பற்றி  தோழி ராசாத்தியிடம் கேட்டபோது அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் நவம்பர் 18ம் தேதி கணவர் முகமது ஆயுப் கான், பதர் நிஷாவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

நகை பணம் காணாமல் போனது பற்றி அப்போது கணவரிடம் பதர் நிஷா எதுவும் சொல்லவில்லை.

நடந்த சம்பவத்தை நீண்ட நாளைக்கு மறைக்க முடியாது என்பதால் நேற்று முன்தினம் (09.12.2024 ) இரவு நகை பணம் காணாமல் போனதை பற்றி தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு நேற்று முன்தினம் கணவருடன் சென்று ஏழு கிணறு காவல் நிலையத்தில் பதர் நிஷா பேகம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பதர்நிஷா பேகமே நகைகளை வேறு யாரிடமாவது கொடுத்து வைத்து விட்டு நாடகம் ஆடுகிறாரா? அல்லது அவரது தோழி ராசாத்தி என? கைவரிசையா என விசாரணை நடைபெறுகிறது.

மதுபோதையில் முதியவர் கொலை – ஒருவர் கைது

MUST READ