spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய மூன்று பேர் கைது

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய மூன்று பேர் கைது

-

- Advertisement -

சென்னை ராயபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த  காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய மூன்று பேரை போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காவல் ஆய்வாளரை தாக்கிய மூன்று பேர் கைது

we-r-hiring

சென்னை ராயபுரம் காவல்  நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் செந்தில்குமார் இவர் நேற்று முன்தினம் இரவு ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டு  கொண்டு இருந்தார்.

அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் குடிப்போதையில் மூன்று இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களை மடக்கிப் பிடித்த  உதவி ஆய்வாளர் செந்தில்குமாரிடம்  சண்டை போட்டு அவரை கன்னத்தில் அடித்து விட்டு ஒருவர் தப்பி ஒடிவிட்டார்.

காவல் ஆய்வாளரை தாக்கிய மூன்று பேர் கைதுகாவல் ஆய்வாளரை தாக்கிய மூன்று பேர் கைது

மேலும் இரண்டு பேரை மடக்கி அவர்களிடம்  இருந்து செல்போனை வாங்கி தனது வாகனத்தில் வைத்து விட்டு விசாரணை செய்து கொண்டிருந்தபோது  மற்றொருவன் வாகனத்திலிருந்து செல்போனை எடுத்துக் கொண்டு  தப்பி ஒடி உள்ளார்.

இதனையடுத்து சென்னை காசிமேட்டை  சேர்ந்த  22 வயதுடைய முகிலனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரனையின் பேரில் தப்பி ஓடி தலைமறைவாக இருந்த சென்னை காசிமேடு எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், காசிமேடு சிங்காரவேலன் நகர் பள்ளம் பகுதியைச் சேர்ந்த சரத் குமார் ஆகிய இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்துள்ளனர். பின்னர்  மூன்று பேர் மீது இராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

MUST READ