Homeசெய்திகள்க்ரைம்40 வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ள பிரபல குற்றவாளி போலீசிடம் சிக்கியதன் பின்னணி என்ன?

40 வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ள பிரபல குற்றவாளி போலீசிடம் சிக்கியதன் பின்னணி என்ன?

-

- Advertisement -

40 வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ள பிரபல குற்றவாளி போலீசிடம் சிக்கியதன் பின்னணி என்ன?

கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 7சவரன் தங்க சங்கிலியை ஒரு கும்பல் பறித்துள்ளது. சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 100 சிசிடிவிக்களுக்கு மேல் ஆய்வு செய்து குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர் .

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே அரும்பாக்கம் பகுதியில் சென்னை – கொல்கத்தா தேசிய சாலையில் பிரபல டயர் கடை இயங்கி வருகிறது. ஜெகத்ராஜன் என்பவருக்கு சொந்தமான கடையில் பிற்பகல் நேரத்தில் அவரது மனைவி கோமதி (39) கடை வியாபாரத்தை கவனிப்பது வாடிக்கை.

கடந்த 28ஆம் தேதி கோமதி கடையில் வாடிக்கையாளர் ஒருவருக்கு டயர் ஒன்றை விற்பனை செய்துள்ளார். அப்போது 3பேர் கடைக்குள் வந்துள்ளனர். கத்தியை காட்டி மிரட்டி கோமதி கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி, கம்மல், 2000ரூபாய் பணம், செல்போனையும் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் ஆட்டோவில் தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆரம்பாக்கம் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும் கடை உரிமையாளர் கோமதி அளித்த தகவலின் பேரில் ஆரம்பாக்கம் போலீசார் 2பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர். கும்மிடிப்பூண்டி குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கணேஷ் தலைமையில் 6பேர் கொண்ட குழுவினர் புலனாய்வை தொடங்கினர்.

முதற்கட்டமாக டயர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கடைக்குள் இருவர் புகுந்ததும் ஒருவன் கத்தியுடன் கடை உரிமையாளரை நோக்கி சென்றதும், மற்றொருவன் ஷட்டரை மூடி கடை உரிமையாளரிடம் இருந்து தாலி சரடையும், செல்போனையும், பணத்தையும் பறித்து கொண்டு கோமதியை மிரட்டி விட்டு கடையின் ஷட்டரை திறந்து வெளியே சென்று மீண்டும் கடையின் ஷட்டரை மூடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது பதிவானது.

தொடர்ந்து கடையின் ஷட்டரை திறந்து வெளியே சென்ற கோமதி கொள்ளையர்கள் நகையை பறித்து சென்று விட்டதாக கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைக்கிறார். மேலும் இருவர் தப்பி சென்ற ஆட்டோவின் பதிவெண் முழுவதும் சந்தனம் தெளித்து மறைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகளை ஆய்வு செய்ததில் வலது கண் சற்று குறைபாடுடன் இருக்கும் நபரது அடையாளங்களை குற்றப்பிரிவு ஆவணங்களில் ஆய்வு செய்ததில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையது தெரிய வந்தது.

இதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலம் தடா முதல் மாதவரம் வரையிலான நெடுஞ்சாலை, கடைகள், வீடுகள் என 100க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் சென்னையில் ஆந்திரா மார்கமாக சென்ற ஆட்டோ தடா வரை சென்று விட்டு மீண்டும் அங்கிருந்து சென்னை நோக்கி வந்த போது டயர் கடையில் புகுந்து தாலி சரடை பறித்து கொண்டு சென்னைக்கு தப்பி சென்றது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் சென்னை காவல்துறை உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் திருவேற்காட்டில் பதுங்கி இருந்த இருவரையும், அமைந்தகரையில் பதுங்கி இருந்த ஒருவரையும் கைது செய்து விசாரணையை முடுக்கினர். இதில் திருவேற்காடு சேர்ந்த ராஜ்குமார் (35), அமைந்தகரையை சேர்ந்த கணேஷ் (34), தாம்பரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி (24) என்பது தெரிய வந்தது.

ராஜ்குமார் மீது கொலை உட்பட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், கணேஷ் மீது கொலை முயற்சி உட்பட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர் தமீம் அன்சாரி இவர்களுக்கு துணை போனது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து ராஜ்குமாரை கடலூர் சிறையிலும், கணேஷ், தமீம் அன்சாரி ஆகிய இருவரை புழல் சிறையில் அடைத்தனர்.

காதலன் திருமணத்தை நிறுத்த வந்த காதலியை குண்டு கட்டாக தூக்கி சென்ற போலீசார்

MUST READ