Homeசெய்திகள்க்ரைம்புதையல் கிடைத்து இருப்பதாக கூறி மோசடி - பெண் ஒருவர் கைது

புதையல் கிடைத்து இருப்பதாக கூறி மோசடி – பெண் ஒருவர் கைது

-

புதையல் கிடைத்து இருப்பதாக கூறி போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கர்நாடக மாண்டிய மாவட்ட கும்பலை சேர்ந்த பெண் ஒருவரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

புதையல் கிடைத்து இருப்பதாக கூறி மோசடி - பெண் ஒருவர் கைது

சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த மாற்று திறானாளியான ருக்மணி. இவருடைய கணவர் ராமநாதன். இவர்கள் நடத்தி வரும் ஜெராக்ஸ் கடைக்கு கடந்த 14 ஆம் தேதி வந்த இரண்டு ஆண் நபர்கள் சார்ஜர், ஹெட்போன் என சிறிய சிறிய பொருட்களை வாங்கி ருக்குமணியிடம் பேசி பழகியுள்ளனர்.

மேலும் அப்பொழுது கட்டிட வேலை செய்யும்போது புதையல் கிடைத்துள்ளதாக ருக்குமணியிடம் கூறியுள்ளனர். அப்போது தங்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும், அதற்கு புதையல் நகையை யாரிடமும் சொல்லாமல் வாங்கிக்கொள்ளும் படியும் கூறியுள்ளனர்.

12 லட்சம் ரூபாய் கேட்டு இறுதியில் 8 லட்சத்திற்கு வியாபாரத்தை முடித்த ருக்குமணி, ராமநாதன் தம்பதியிடம் சிறிய அளவு தங்கத்தை கொடுத்துள்ளனர்.

புதையல் கிடைத்து இருப்பதாக கூறி மோசடி - பெண் ஒருவர் கைது

நகைக்கடைக்கு கொண்டு சோதித்தபோது தங்கம் என உறுதியானதால் வாங்கிகொள்ள ருக்குமணி ஒத்துக்கொண்டார்.

தாம்பரத்தில் உள்ள தனியார் உணவகத்தில் வைத்து பெண் உள்ளிட்ட 3 பேரிடம் 6.5 லட்சம் ரூபாயை 24 ஆம் தேதி கொடுத்து செயினை பெற்றுக்கொண்டனர்.

அந்த நகைகளை நேரடியாக சோதனை செய்தபோது முற்றிலும் போலி என தெரிந்ததால் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இதனால் அங்குள்ள சிசிடிவி காட்சிகள், செல்போன் எண்கள் வைத்து விசரணையை துவக்கிய நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் ஆப்பூர் பகுதியில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இணையத்தில் ரிவ்யூ கொடுங்க பணம் சம்பாதிங்க என கூறி லட்சக்கணக்கில் மோசடி

அங்கு சென்று போலீசார் சோதனை நடத்திய போது அந்த கும்பல் அங்கிருந்து தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சோதனை செய்தபோது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பெண் ஒருவரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது கீதா (வயது-47) கர்நாடக மாநிலம் மாண்டியாவை சார்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் கீதாவிடம் இருந்து செல்போன்கள் போலி நகைகள் 5.5 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு இந்த கும்பல் ஊடுருவி மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

தொடர்ந்து தப்பி ஓடிய ரோஹித், கிட்டா ஆகிய இரண்டு நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் தாம்பரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மாற்று திறனாளி பெண் ருக்மணியின் நகை, வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்து அதன் மூலம் பணத்தை தயார் செய்யும் அளவிற்கு தன்னை முளைச்சலவை செய்ததாகவும் அவர்கள் என்ன சொன்னாலும் கேட்கும் விதமாக தன்னை மனதளவில் பலவீனப்படுத்தியதாக அப்பெண் கண் கலங்க கூறினார். போலீசாரின் தீவிர விசாரணையில் ஒரு பெண் 5.5 லட்சம் மீட்கப்பட்டதாகவும் ரோஹித், கிட்டா ஆகிய இருவர் பிடிப்பட்டால் மேலும் பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.

MUST READ