Homeசெய்திகள்க்ரைம்ஸ்பா சென்டர்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு

ஸ்பா சென்டர்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு

-

- Advertisement -

சென்னையில் 13 இடங்களில் ஸ்பா சென்டர் ஆரம்பித்துள்ளனா். அதில்  பெரும்பாலும் பாலியல் தொழிலை அதன் உரிமையாளரே நடத்தியுள்ளனா் என தகவலறிந்த காவல்துறையினா் அவா்களை கைது செய்தனர்.ஸ்பா சென்டர்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் காப்பகத்தில்  ஒப்படைப்பு சென்னை அண்ணாநகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்பா என்ற பெயரில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக சிலகிடைத்தன. அந்த தகவல்படி, அண்ணாநகர் காவல்துறையினா் உடனடியாக அந்த ஸ்பா சென்டரை கண்காணித்து வந்தனா். அப்போது பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதியானது. அதனையடுத்து, ஸ்பா சென்டரில் புகுந்து சோதனை நடத்தி வெளிமாநில பெண்களை மீட்டனா். பின்னா் சென்னை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனா்.

மேலும் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த மேனேஜர் உட்பட 4 பேரையும் காவல்துறையினா் கைது செய்தனர். ஸ்பா சென்டர் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டர். அவரை காவல்துறையினா் தேடி வந்தனர். இந்தநிலையில், மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மந்தைவெளி பகுதியை சேர்ந்த ஹேமா ஜுலியோ(50) என்பவா் பதுங்கியிருந்தாா். அவரை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினா் ஈடுபட்டு கைது செய்தனர்.  இதில் இவருக்கு சென்னை முழுவதும் 13-க்கும் மேற்பட்ட ஸ்பா சென்டர் இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திவந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது காவல் துறையினா்  வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலி

 

MUST READ