Homeசெய்திகள்மாவட்டம்ராமேஸ்வரம் அருகே சோகம்: கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் மாயம்;...

ராமேஸ்வரம் அருகே சோகம்: கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் மாயம்; உறவினர்கள் தீவிர தேடுதலுக்குக் கோரிக்கை!

-

- Advertisement -

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர், எதிர்பாராதவிதமாகப் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடகாட்டில் சொத்துத் தகராறில் பயங்கரம்: அதிமுக பிரமுகரின் மகன் அரிவாளால் வெட்டிக் கொலை; உறவினர்கள் சாலை மறியல்!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கோவில்வாடி கடற்கரைப் பகுதியிலிருந்து நேற்று இரவு தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த தயான் என்பவர் விசைப்படகில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளார்.

we-r-hiring

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர் திடீரெனப் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து மாயமானதாக சக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் விழுந்த மீனவர் தயானைத் தேடும் பணியில் உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கரைக்குத் திரும்பும் மற்ற மீனவர்கள், கடல் நடுவே தயான் எங்காவது தவித்துக் கொண்டிருக்கிறாரா என்பதைக் கண்காணித்து மீட்டு வர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் படை (Coast Guard) மற்றும் கடலோரப் பாதுகாப்பு குழுமப் போலீசார் (Marine Police) ஆகியோர் உடனடியாகக் கடலில் இறங்கி மாயமான மீனவர் தயானைத் தேடி கண்டுபிடித்துப் பத்திரமாக மீட்டு வர வேண்டும் என்று அவரது உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலில் மீனவர் மாயமான சம்பவம் தங்கச்சிமடம் மற்றும் மண்டபம் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காந்திகிராமப் பல்கலைக்கழகப் பதிவாளர் நேர்காணலில் முறைகேடு புகார்: தகுதியற்றவருக்குப் பதவி வழங்கத் திட்டமா?

MUST READ