Homeசெய்திகள்மாவட்டம்கோவை சிங்கநல்லூர் உழவர் சந்தை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

கோவை சிங்கநல்லூர் உழவர் சந்தை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

-

- Advertisement -

நீதிமன்ற உத்தரவை முழுமையாகச் செயல்படுத்தக் கோரிக்கை – நுழைவு வாயிலில் அமர்ந்து விவசாயிகள் முழக்கம்கோவை சிங்கநல்லூர் உழவர் சந்தை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

கோவை சிங்கநல்லூர் உழவர் சந்தை பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்படும் ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவுப்படி முழுமையாக அகற்ற வலியுறுத்தி, சிங்கநல்லூர் உழவர் சந்தை உழவர் நலச் சங்கம் சார்பில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

we-r-hiring

நுழைவு வாயிலில் காத்திருப்பு போராட்டம்
சிங்கநல்லூர் உழவர் சந்தையின் நுழைவு வாயிலிலேயே அமர்ந்து விவசாயிகள் நடத்தி வரும் இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. நீதிமன்ற உத்தரவை மாநகராட்சி நிர்வாகம் அரைகுறையாகச் செயல்படுத்துவதாகக் குற்றம் சாட்டி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகளின் குற்றச்சாட்டுகளும் கோரிக்கைகளும்
போராட்டம் குறித்து சிங்கநல்லூர் உழவர் சந்தை உழவர் நலச் சங்கப் பிரதிநிதி நந்தகுமார் தெரிவித்ததாவது:

“கடந்த 27-ஆம் தேதி முதல் உழவர் சந்தையின் வெளிப்புறத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்திப் பல கட்டப் போராட்டங்களையும், காத்திருப்புப் போராட்டத்தையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

நீதிமன்ற உத்தரவின்படி, உழவர் சந்தையிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் எந்தவிதமான வெளிக்கடைகளும் அமைத்து வியாபாரம் செய்யக் கூடாது என்று தெளிவாக ஆணை உள்ளது. ஆனால், மாநகராட்சி நிர்வாகமோ 70 மீட்டர் தொலைவு வரையிலான கடைகளை மட்டுமே அப்புறப்படுத்திவிட்டு, மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் விட்டுள்ளது.

உழவர் சந்தைக்கு வெளியே டெம்போக்கள் மற்றும் தள்ளுவண்டிகளில் காய்கறிகளை விற்பனை செய்வதால், சந்தைக்குள் காய்கறிகளைக் கொண்டுவரும் உண்மையான விவசாயிகளின் விளைபொருட்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.”

“முறையாக அடையாள அட்டை பெற்று வரட்டும்!”
வெளிக்கடைகளில் வியாபாரம் செய்வோருக்கு அழைப்பு விடுத்த நந்தகுமார்:
“வெளியே வியாபாரம் செய்வோரும் உண்மையான விவசாயிகளாக இருந்தால், தோட்டக்கலைத் துறை மூலமாக நிலச் சிட்டா மற்றும் அடங்கல் நகல்களைச் சமர்ப்பித்து, அடையாள அட்டை பெற்று உழவர் சந்தைக்குள் முறைப்படி வந்து வியாபாரம் செய்யட்டும். அதற்கு நாங்கள் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி 100 மீட்டர் எல்லை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக அப்புறப்படுத்தும் வரை எங்களது இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” எனக் கண்டிப்புடன் தெரிவித்தார்.

சிவகாசி அருகே காகித அட்டை பேக்கேஜிங் ஆலையில் பயங்கர தீ விபத்து: தீயணைப்புப் படையினர் தீவிர மீட்புப் பணி!

MUST READ