Homeசெய்திகள்மாவட்டம்திருநின்றவூரில் 3ம் வகுப்பு சிறுமி சாலை விபத்தில் பலி

திருநின்றவூரில் 3ம் வகுப்பு சிறுமி சாலை விபத்தில் பலி

-

- Advertisement -

திருநின்றவூரில் 3ம் வகுப்பு சிறுமி சாலை விபத்தில் பலி

ஆவடி அடுத்த திருநின்றவூரில் தந்தை கண் முன்னே 3ம் வகுப்பு சிறுமி சாலை விபத்தில் தலை நசுங்கி பலி.

we-r-hiring

ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோஷ். இவரது மகள் ஜோஃபி. வேப்பம்பட்டு அருகே உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மகள் ஜோஃபியை ஜோஷ் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னே சென்ற லாரியை முந்திசெல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி தனது மகளுடன் ஜோஸ் சாலையில் விழுந்துள்ளார்.

இதில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுமி ஜோஃபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் மெல்ல மெல்ல எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர் பேட்டி

மேலும் லாரியை பறிமுதல் செய்துள்ள திருநின்றவூர் போலீசார் தப்பியோடிய லாரியின் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். தந்தை கண்முன்னே மகள் விபத்தில் சிக்கி தலை நசிங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ