Homeசெய்திகள்மாவட்டம்அந்தியூர் வனப்பகுதியில் சிறுத்தை சாவு: பாகங்களை எரித்த 2 வன ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'!

அந்தியூர் வனப்பகுதியில் சிறுத்தை சாவு: பாகங்களை எரித்த 2 வன ஊழியர்கள் ‘சஸ்பெண்ட்’!

-

- Advertisement -

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தையின் உடற்பாகங்களை உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் எரித்து மறைத்த வனக் காப்பாளர் மற்றும் வாட்சர் அதிரடியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.

அந்தியூர்

we-r-hiring

சம்பவத்தின் பின்னணி:

  • மர்மச் சாவு: அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மாதையன் கோயில் வனப்பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்தது.

  • அாதாரங்கள் அழிப்பு: ரோந்து சென்ற வனக் காப்பாளர் மைதிலி மற்றும் வன வாட்சர் பிரவீன் ஆகியோர், உயர்மட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல், அழுகிய நிலையிலிருந்த சிறுத்தையின் நகம், பல் உள்ளிட்ட பாகங்களை எடுத்து எரித்து அழித்துள்ளனர்.

  • ரகசியத் தகவல்: புதிதாகப் பொறுப்பேற்ற வனச்சரகர் நந்தினிக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் நடத்திய தீவிர விசாரணையில், இச்சம்பவம் மூடிமறைக்கப்பட்டது உறுதியானது.

அதிரடி நடவடிக்கை:

வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியக (WCCB) அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் குமுளி வெங்கட அப்பால நாயுடு, வனக் காப்பாளர் மைதிலி மற்றும் வாட்சர் பிரவீன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய வனவர் பாரதிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சிறுத்தையின் சடலத்தை மறைத்து பாகங்களை எரித்த இந்த சம்பவம் வனத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தொடரும் ஆவின் பால் தட்டுப்பாடு: தவிப்பில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்!

MUST READ