தென்காசி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த கொண்ட குஜராத் இளம் பெண்ணை பெற்றோர்கள் கடத்தி சென்ற வழக்கில் ஜாமின், முன்ஜாமின் கோரி மனு.
பட்டப் பகலில் பொது இடத்தில் அடித்து கடத்துவது போன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது- நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் கடுமையான குற்றங்களாக பார்க்கப்படுகிறது என்றார் நீதிபதி.

கிருத்திகா கடத்தல் வழக்கில் அவரது அப்பா உள்ளிட்ட எட்டு நபர்களுக்கும் முன் ஜாமின் வழங்க முடியாது என கூறி மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கைது செய்யபட்டு சிறையில் உள்ள 5 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தத் வினித் இதே பகுதியில் வசிக்கும் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட இளம் பெண் கிருத்திகாவை காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கிருத்திகாவின் பெற்றோர் வினித் மற்றும் அவரின் உறவினர்களை தாக்கி இளம் பெண்ணை கடத்தி சென்றனர்.

இந்த வழக்கில் பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட 13 பேர் வழக்கு பதிந்த போலிஸ்சார் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் எட்டு நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கிருத்திகாவின் அப்பா நவீன் பட்டேல் உள்பட அவரது குடும்பத்தினர் 8 போர் தங்களுக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். இதே போல் கைது செய்யபட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் இந்த இளம் பெண் முன்னுக்கு பின்னாக முரணான தகவல்களை தனது வாக்குமூலத்தில் வழங்கி உள்ளார். பட்ட பகலில் ஒரு தரப்பினரை அடித்து காரில் கடத்தியுள்ளனர். வழக்கிற்கு தேவையான போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளது.
மேலும் இந்த வழக்கில் கிருத்திகா குற்றவாளியாக சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே யாருக்கும் ஜாமீன் மற்றும் முன் ஜாமின் வழங்கக் கூடாது என உத்தரவிட்டார்.

இதனை பதிவு செய்த நீதிபதி பட்ட பகலில் பொது இடத்தில் வீடு புகுந்து அடித்து கடத்துவது போன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது கடுமையான குற்றம் எனவே தலைமறைவாக உள்ள யாருக்கும் முன் ஜாமின் வழங்க முடியாது என கூறிய நீதிபதி இந்த மனுவை மனுதாரர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவித்ததை தொடர்ந்து முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களின் சிறைக்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என உத்தரவு பிறப்பித்தார்.
ஜாமீனில் வெளி வருபவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை தென்காசி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து பிறப்பிக்க வேண்டும் என நிபந்தனையும் பிறப்பித்துள்ளார்.
