spot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்சேலம் மீனவர் ராஜாவின் உடல் அடக்கம்

சேலம் மீனவர் ராஜாவின் உடல் அடக்கம்

-

- Advertisement -

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் பாலாற்றில் மிகுந்த மீனவர் ராஜாவின் உடல் , சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் இன்று(19.02.2023) காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு சென்ற உடலின் முன்புறம் மற்றும் பின்புறம் காவல்துறையினர் பாதுகாப்புடன் சென்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்து தமிழக எல்லையில் உள்ள கோவிந்தபாடி கிராமத்தை சேர்ந்தவர் காரவடையான் என்கிற ராஜா. இவர் கடந்த 14ந் தேதி தனது நண்பர்களுடன் மீன்பிடிப்பதற்காக தமிழக கர்நாடக எல்லையான பாலாற்றுக்கு சென்றனர். பாலாற்றில் மீன்பிடிக்க பரிசினை சென்றவர்கள் மறுபுற கரையோரம் கர்நாடக வன எல்லை பகுதிக்கு சென்று விட்டதால், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கர்நாடக வனத்துறையினர் ராஜா கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அப்போது ராஜாவுடன் சென்ற இளையபெருமாள் மற்றும் ரவி ஆகியோர் தப்பி ஓடி விட்டனர்.
ஆனால் ராஜாவை காணவில்லை.

we-r-hiring

இரண்டு நாட்களாக உறவினர்கள் ராஜாவை தேடி வந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி பாலாற்றில் தமிழக எல்லைப் பகுதியில் அவரது உடல் தண்ணீரில் மிதந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைய அந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அங்கு திரண்டு, கர்நாடக வனத்துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அந்த எல்லைப் பகுதிக்கு உட்பட்ட ஈரோடு மாவட்ட பர்கூர் போலீசார் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


ஆனால் உறவினர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்ய கூடாது ஒப்புதல் அளிக்காமல், சம்மந்தப்பட்ட கர்நாடக வனத்துறையினர் மீது வழக்கு பதிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , கர்நாடக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து நேற்று முன் தினம் உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

இதனை எடுத்து நேற்று மாலை மீனவர் ராஜாவின் உடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடல் ஒப்படைக்க கூடிய நிலையில் அங்கு வந்த ராஜாவின் உறவினர்கள் சிலர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த செலவு கர்நாடக வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உடலை வாங்க கூடாது நேற்றும் குடலை வாங்காமல் சொந்த ஊர் திரும்பினர்.

இதனால் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் சேலம் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, தனியார் பள்ளி ஒன்றில் ராஜாவின் மனைவிக்கு ஆயா வேலைக்கான பணி ஆணையும் வழங்கினர்.

உடலை பெற்றுக் கொள்வதாக உறுதி அளித்த உறவினர்கள் இன்று காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாலமுருகன் மற்றும் பர்கூர் காவல் நிலைய அதிகாரிகள் உடலை பெற்றுக் கொள்வதற்கான படிவத்தில் உறவினரிடம் கையெழுத்து பெற்றனர்.

மீனவர் ராஜாவின் சகோதரர் காசி விஸ்வநாதன், அண்ணி மகேஸ்வரி, மைத்துனர் ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டு மீனவராஜாவின் உடலை பெற்றுக் கொண்டனர். இதனை அடுத்து காவல்துறை ஏற்பாட்டின் பேரில் மீனவர் ராஜாவின் முதல் ஆம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றப்பட்டது.
பின்னர் கோவிந்தபாடி மயானத்திற்கு தற்போது உடல் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

MUST READ