செங்குன்றம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை. தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தகவல்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் உயிரிழந்தார்.
இவரது மகள் கீர்த்தி (20) சென்னை தனியார் கல்லூரியில் இளங்கலை குற்றவியல் பட்டப்படிப்பு 3ஆம் ஆண்டு பயின்று வந்தார். இன்று காலை கீர்த்தியின் தாய் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார்.
கீர்த்தியின் நண்பர்கள் கல்லூரிக்கு அழைத்து செல்ல வந்த போது நீண்ட நேரமாகியும் கீர்த்தி வெளியே வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கிட்டு நிலையில் கிடந்தார்.
உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த செங்குன்றம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தந்தை இறந்ததால் கீர்த்தி துக்கம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியத