சிட்லப்பாக்கம் அருகே காதல் தோல்வி காரணமாக நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிட்லப்பாக்கம் அடுத்த கோதாவரி தெருவை சேர்ந்தவர் ஆனந்தி, இவர் சூப் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் ஹேமபிரியா (16) தனியார் கல்லுரியில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் ஹேமபிரியா கல்லூரியில் கௌதம் என்ற மாணவனை காதலித்து வந்ததாகவும் ஆனால் அந்த மாணவன் வேற ஒரு பெண்ணை காதலித்து வந்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.


காதல் தோல்வியால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த ஹேமபிரியா கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தவர். நேற்று அவரின் வீட்டில் உள்ள மின் விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய ஆனந்தி, வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது ஹேமபிரியா தூக்கில் தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர். அப்போது, நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியே தற்கொலைக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.
