Homeசெய்திகள்மாவட்டம்மதுரை: இன்டக்ஷன் அடுப்பு ஸ்டாக் இல்லை…விறகு அடுப்புகளை தேடும் பெண்கள்…

மதுரை: இன்டக்ஷன் அடுப்பு ஸ்டாக் இல்லை…விறகு அடுப்புகளை தேடும் பெண்கள்…

-

- Advertisement -

மதுரையில் வீட்டு உபயோக சமையல் எாிவாயு சிலிண்டர்களின் வரத்து குறைவால், பெண்கள் பலரும் விறகு அடுப்புகளை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.மதுரை: இண்டக்ஸன் ஸ்டவ் ஸ்டாக் இல்லை…விறகு அடுப்புகளை தேடும் பெண்கள்…ஈரான் – அமெரிக்க போர் எதிரொலியாக, தமிழகத்தில் வர்த்தக சமையல் எாிவாயு சிலிண்டர் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்கள், உணவு விடுதிகளில் விறகுகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.

இதன்படி பல்வேறு ஹோட்டல்களிலும் தற்போது விறகு அடுப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதற்கான வசதிகள் இல்லாத இரவு நேர ஹோட்டல்கள் பலவும், காஸ் பற்றாக்குறையால் மூடப்பட்டு வருகின்றன. இதற்கிடையே திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அன்னதானம் தயாரிப்பு பணிகளுக்கு வர்த்தக சிலிண்டர் விநியோகம் இதுவரை சரியாகவில்லை. இதனால் அங்கு விறகு அடுப்புகளில் தான் அன்னதானம் திட்டத்திற்கான உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

we-r-hiring

இதற்கிடையே பொதுமக்கள் பலரும், எாிவாயு தட்டுப்பாடு காரணமாக தற்போது விறகு அடுப்புகளை தேடும் நிலை வந்துள்ளது. ஹோட்டல்களில் விறகு அடுப்பு சமையல் தொடங்கியதால், மதுரை மாட்டுத்தாவணி விறகு மண்டியில் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஹோட்டல் உரிமையாளர்கள் அதிக அளவில் கொள்முதல் செய்வதால், இந்த விலையேற்றம் இருப்பதாக கூறப்படுகிறது.

மதுரையில் திரும்பும் திசையெங்கும் வடை கடைகள் பெருகிக் கிடக்கின்றன. மெது வடை, ஆமை வடை, மசால் வடை, கீரை வடை, வெங்காய போண்டா, தயிர் வடை, முள்முருங்கை வடை, வாழைப்பூ வடை என டீயோடு வடையை ருசிப்பவர்கள் அதிகம். மதுரை மக்கள் மட்டுமின்றி சுற்றுலா வருபவர்களின் விருப்பத்திலும் இவை முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனால் சாலையோரங்களில் அதிக எண்ணிக்கையில் தள்ளுவண்டிகளிலும் சுவை, சுகாதாரம், விலை குறைவாக வடைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். தற்போது எாிவாயு பற்றாக்குறையால் இந்த கடைகளில் பலவும் காணாமல் போனது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.

இதற்கிடையே எாிவாயு சிலிண்டருக்கு மாற்றாக விறகு அடுப்புகள் மட்டுமின்றி இண்டக்ஸன் ஸ்டவ் எனப்படும் மின்சார அடுப்புகளையும் பொதுமக்கள் அதிகம் கொள்முதல் செய்கின்றனர். முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் எரிவாயு பிரச்னை ஏற்பட்டபோதே பலரும் கடைகளில் அவற்றை அதிகம் கொள்முதல் செய்தனர்.

அதனால் தற்போது மதுரை மாநகரில் உள்ள முன்னணி விற்பனை நிலையங்கள் எதிலும் இந்த அடுப்புகள் ஸ்டாக் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. அவற்றை கேட்டு வரும் மக்களிடம், ‘புக் செய்துள்ளோம் விரைவில் வரும்’என்பது கடைகளில் இருப்போரின் பதிலாக உள்ளது.

இதுகுறித்து வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையாளர் ஒருவர் கூறும்போது, ‘எாிவாயு தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் இண்டக்சன், காயில் உள்ளிட்ட மின் அடுப்புகளை அதிகம் வாங்கினர். இவற்றின் விற்பனை அதிகரித்ததால், தற்போது எந்த கடையிலும் கையிருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிக எண்ணிக்கையிலான ஆர்டர்கள் போட்டுள்ளோம். பெரிய ஓட்டல்களுக்கு ஹீட்டிங் எலிமென்ட் பொருத்தி காயிலுடன் மின் அடுப்பு வசதிகளும் செய்து தரப்படுகிறது’ என்றார்.

சமையல் எாிவாயு பிரச்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாத ஒன்றிய அரசு, நாள்தோறும் சிலிண்டர் எரிவாயு பற்றாக்குறை இல்லை என்று அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

ஆனால் ஒரு சிலிண்டர் புக் செய்தால், மீண்டும் ஒன்று பதிவு செய்ய நகர பகுதிகளில் 25 நாட்கள் மற்றும் கிராம பகுதிகளில் 45 நாட்கள் என, கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 25 நாட்கள் கழித்து பதிவு செய்யும் வீட்டு உபயோக எாிவாயு சிலிண்டர்கள் வந்து சேர குறைந்தபட்சம் 20 நாட்கள் வரை ஆகிறது.

இதனால் ஆறு அல்லது ஏழு பேர் உள்ள குடும்பத்தில் ஒரு எாிவாயு சிலிண்டர் 45 நாட்கள் வரை பயன்பாட்டில் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. மேலும், எாிவாயு சிலிண்டர் பதிவு செய்யும்போது, அதற்கான ரகசிய எண் மற்றும் பில் போன்றவை பதிவு செய்பவரின் செல்போனில் குறுந்தகவலாக வருகிறது. ஆனால் எாிவாயு சிலிண்டர் மட்டும் வர மறுப்பது, எாிவாயு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது சந்தேகம் எழுப்புவதாக இருக்கிறது.

வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!

MUST READ