spot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்சிவராத்திரி அன்று கோபுர உச்சியில் மது போதையில் நின்று சிவதாண்டவம் ஆடிய நபர் கீழே விழுந்து...

சிவராத்திரி அன்று கோபுர உச்சியில் மது போதையில் நின்று சிவதாண்டவம் ஆடிய நபர் கீழே விழுந்து உயிரிழப்பு – திருவள்ளூர்

-

- Advertisement -

திருவள்ளூர் அடுத்த செஞ்சி கிராமத்தில் உள்ள ஜனமே ஜெயா ஈஸ்வரர் ஆலயத்தின் மேல் கோபுரத்தில் ஏறி சிவராத்திரி தினத்தில் நடனமாடிய நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த செஞ்சி கிராமத்தில் சோழர்கள் காலத்தால் பாறை கற்களால் கொண்டு கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான ஜனமே ஜெய ஈஸ்வரர் ஆலயம் இருந்து வருகிறது.

அந்த ஆலயம் சிதலமடைந்து எந்த நேரத்திலும் கீழே இடிந்து விழும் நிலையிலும் இருந்து வருகிறது.

we-r-hiring

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று விடிய விடிய பூஜைகள் செய்து வழக்கமாக அக்கிராமத்து மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த ஆலயத்திற்கு திருவள்ளூர் சுற்று வட்டார கிராம மக்களும் மகா சிவராத்திரிக்கு கலந்து கொள்வது வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர்.

அதேபோன்று நேற்று முன்தினம் மகா சிவராத்திரி அன்று கோவிலில் விடிய விடிய பூஜையும் சிவனுக்கு அபிஷேகம் செய்தோம் சிறப்பு பூஜைகள் நடத்தியும் வந்தனர்.

இந்த ஆலயத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த தனஞ்செழியன் அவருடைய தந்தை தர்ம காத்தாவாக இருந்து வந்துள்ளார்.

எந்த நேரத்திலும் தந்தை அந்தக் கோவிலிலே பூஜைகள் செய்தோம் அறங்காவலராக இருந்து வந்ததால். சிறிய வயதில் முதல் தனஞ்செயனனும் அந்த கோவிலிலே எந்த நேரத்திலும் இருந்து வந்துள்ளார்.

பிறகு தனஞ்செழியன் கடம்பத்தூர் பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக் ஆகவும் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருக்கு திருமணம் செய்து வைத்து இரண்டு குழந்தைகள் இருந்து வருகிறது.

அவர் ஆன்மீகத்தில் கொண்ட ஈடுபாடால் முழுமையாக சிவ பக்தனாக மாறி உள்ளார். எந்த நேரத்திலும் ஈஸ்வரன் கோவில் பகுதிகளே இருந்து வந்துள்ளார்.

நேற்றைய முன்தினம் சிவராத்திரி நாளன்று தனஞ்செழியன் மது போதையில் ஈஸ்வரன் கோவில் கோபுரம் மீது ஏறி ’நான் சிவன்’ என்றும் ஒற்றைக்காலில் நீண்ட நேரம் நின்று ’ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாய’ எனவும் முழங்கியுள்ளார்.

அதைத்தொடர்ந்து அவர் தடுமாறி கோபுர உச்சியில் இருந்து கீழே விழுந்தவர் பாறை கற்கள் மீது தலை மோதியதில் ரத்தம் சொட்ட கீழே சரிந்தார்.

பின்னால் அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் எப்போதுமே மது போதையில் அந்த கோபுர உச்சியில் சென்று சிவதாண்டவம் செய்வது போல் ஒற்றைக்காலில் நின்று ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என அவர் உச்சரிப்பார் என்றும். அவர் அதேபோன்று பலமுறை கோவில் மீது ஏறி செய்திருப்பதாகவும். அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அவர் உடலை கைப்பற்றிய கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையானது மேற்கொண்டு வருகின்றனர்.

சிவராத்திரி அன்று கோபுர உச்சி மீது மது போதையில் நின்று சிவதாண்டவம் ஆடிய நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ