spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்விற்பனையாளர் மற்றும் கட்டுநர்  பணியிடங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் இன்று தொடக்கம்

விற்பனையாளர் மற்றும் கட்டுநர்  பணியிடங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் இன்று தொடக்கம்

-

- Advertisement -

விற்பனையாளர் மற்றும் கட்டுநர்  பணியிடங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் இன்று தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் 109 பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் தொடங்கியது.  விற்பனையாளர் மற்றும் கட்டுநர்  பணியிடங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் இன்று தொடக்கம்

we-r-hiring

தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் 2000  பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் காலியாக உள்ள நியாய விலை கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் 109 இடங்களுக்கு மாவட்டத்தில் 10151 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர்.விற்பனையாளர் மற்றும் கட்டுநர்  பணியிடங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் இன்று தொடக்கம்விண்ணப்பம் செய்திருந்தவர்களுக்கான பள்ளிச் சான்றிதழ் வகுப்பு சான்றிதழ் போன்ற அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது.இதில் காலை மதியம் என இரண்டு பகுதியாக அசல் ஆவணங்கள் சரிபார்க்க திருவள்ளூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் பகுதியாக 500 பேருக்கான அசல் ஆவணங்களை சரிபார்க்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.விற்பனையாளர் மற்றும் கட்டுநர்  பணியிடங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் இன்று தொடக்கம்இந்த காலி பணியிடங்களில் நியாய விலை கடை விற்பனையாளருக்கு கல்வித் தகுதி பன்னிரண்டாம் வகுப்பும் கட்டுநர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியாக கேட்கப்பட்டுள்ளது.நேர்காணல் இன்று தொடங்கி அடுத்த மாதம் 6 ஆம்  தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.இந்த காலி பணியிடங்களுக்கு எஸ்சி எஸ்டி வகுப்பினருக்கு எந்தவித வயது வரம்பும் இல்லை ஓசி வகுப்பினருக்கு 32 வயதும்  முன்னாள் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 50 வயதும் மாற்றுத்திறனாளிகளுக்கு 42 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 9ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது!

MUST READ